/* */

ஹீமோபிலியா தினம்: நோயாளிகளை உற்சாகமூட்ட மருத்துவர்கள் கேக் வெட்டி பரிசளிப்பு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் ஹீமோபிலியா தினத்தையொட்டிமுன்னிட்டு மருத்துவர்கள் நோயாளிகளுடன் கேக் வெட்டி

HIGHLIGHTS

ஹீமோபிலியா தினம்: நோயாளிகளை உற்சாகமூட்ட  மருத்துவர்கள்  கேக் வெட்டி பரிசளிப்பு
X

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடந்த உலக ஹீமோபிலியா தினத்தை முன்னிட்டு  நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மருத்துவர்கள் 

உலக ஹீமோபிலியா தினத்தை முன்னிட்டுதூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உலக ஹீமோபிலியா தினத்தை முன்னிட்டு ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு மருத்துவர்கள் பரிசுகள் வழங்கி கேக் வெட்டி கொண்டாடினர்.

ஹீமோபிலியா நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஹீமோபிலியா தினம் மருத்துவமனை முதல்வர் நேரு தலைமையில் நடைபெற்றது.

இதில் ஹீமோபிலியா என்னும் இந்த ரத்தக்கசிவை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் அவர்கள் பெற்றோர் எப்படி கவனிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர்.தூத்துக்குடி மாவட்டத்தில் ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மேலும் ஹீமோபிலியா பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு மருத்துவர்கள் பரிசுகள் வழங்கி கேக் வெட்டி ஹீமோபிலியா பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சி ஹீமோபிலியா சங்க செயலரும் மருத்துவர் அன்பு ராஜன், அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ராஜேந்திரன், துணை முதல்வர் கலைவாணி, துணை மருத்துவ கண்காணிப்பாளர் குமரன், குழந்தைகள் துறை பாபு கந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 April 2022 3:00 AM GMT

Related News