/* */

100 சதுர  கிலோ மீட்டருக்குள் வேலைவாய்ப்பு மையம் : சரத்குமார்

இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்காக 100 சதுர கிலோ மீட்டர் ஒன்றுக்கு ஒரு வேலைவாய்ப்பு மையம் தொடங்கப்படும் என தூத்துக்குடி பிரசார கூட்டத்தில் ச.ம.க தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

HIGHLIGHTS

100 சதுர  கிலோ மீட்டருக்குள் வேலைவாய்ப்பு மையம் : சரத்குமார்
X

தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் அக்கட்சி வேட்பாளர் சுந்தருக்கு ஆதரவு கேட்டு கீழசண்முகபுரம் பகுதியில் இன்று மாலை பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், வல்லவர்களும், நல்லவர்களும், நேர்மையானவர்கள் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு உருவாக்கிய இந்த கூட்டணி மக்களின் முதல் கூட்டணி, இது புதிய கூட்டணி என்ற அவர்,

53 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு உள்ள இரண்டு திராவிட கட்சிகளும் பாதாள சாக்கடை திட்டத்தைகூட சரியாக செயல்படுத்த முடியவில்லை. ஆனால் ஆடம்பர திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்று சொல்லி 5 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடனை ஏற்படுத்தி உள்ளனர்.

மேலும் இலவசங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இந்த கடன் சுமையை எப்படி குறைப்பது எவ்வாறு தொழில் வளத்தைப் பெருக்குவது கடன் சுமையை குறைக்க வேண்டும் என்பதற்காக சிறந்த திட்டத்தை எங்கள் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துள்ளோம், இதுதான் தொலைநோக்குத் திட்டம் என்று அவர் கூறினார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவதற்காக 100 சதுர கிலோ மீட்டர் ஒன்றுக்கு ஒரு வேலைவாய்ப்பு மையம் தொடங்கப்படும். படித்த இளைஞர்கள் இளம் பெண்கள் அங்கு சென்றால் வேலையை பெற்று தான் திரும்ப முடியும் என்ற சூழலை உருவாக்குவோம். இது ஆராய்ந்து எடுக்கப்பட்ட திட்டம்.

மாணவ மாணவிகள் வீட்டிலிருந்தே படிப்பதற்காக மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குவதோடு குக்கிராமம் முதல் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் இலவசமாக இணையதள வசதி வழங்கப்படும்.

எங்களுடைய தேர்தல் அறிக்கை ஆழமாக சிந்தித்து அளிக்கப்பட்டுள்ளது. பணம் இல்லா அரசியல் எளியோருக்கு வாய்ப்பு இந்த அடிப்படையில் எங்களது கட்சி வேட்பாளர் சுந்தருக்கு நீங்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 130 கோடி பாராளுமன்ற தொகுதி என்றால் 150 கோடி இருந்தால் தான் போட்டியிட முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டும்.

பணம் இல்லாத சாதாரண குடிமகன் சட்டமன்றத்திற்கு பாராளுமன்றத்திற்கு செல்லமுடியாது என்ற நிலையை மாற்றி எளியவர்களுக்கு வாய்ப்பு மக்களுக்கு சேவை செய்பவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற அவர், பணம் கொடுத்தால் தயவுசெய்து வாங்காதீர்கள் என அவர் கூறினார்.

Updated On: 3 April 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது