/* */

குலாப் புயல் : தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

மத்திய கிழக்கு மற்றும் வட மேற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியுள்ளது

HIGHLIGHTS

குலாப் புயல்  : தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
X

குலாப் புயல் எதிரொலியாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 2 -ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வட மேற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேலும் வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. புயலுக்கு குலாப் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த புயலானது தற்போது கலிங்கப்பட்டிணத்திற்கு சுமார் 440 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலம் இடையே கலிங்கப்பட்டினம் அருகே (செப்-26 ) இன்று மாலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Updated On: 26 Sep 2021 6:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  3. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  4. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  5. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  6. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  7. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  8. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  10. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...