/* */

ஸ்ரீவைகுண்டம் அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: போலீஸ் குவிப்பு

ஸ்ரீவைகுண்டம் அருகே மரத்தடி நிழலில் படுத்து தூங்கி கொண்டிருந்த தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

HIGHLIGHTS

ஸ்ரீவைகுண்டம் அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: போலீஸ் குவிப்பு
X

கொலை செய்யப்பட்ட தொழிலாளி மணி.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரை கீழுரைச் சேர்ந்தவர் மணி (60). இவர் கூலி தொழில் செய்து கொண்டு அவ்வப்போது ஆடு மேய்த்தும் வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்னனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

இந்த நிலையில் மணக்கரை ஊருக்கு கீழ்புறம் உள்ள மாடசாமி கோயில் அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு, அருகில் இருந்த ஒரு வேப்பரத்தின் அடியில் இன்று மணி படுத்து தூங்கி கொண்டிருந்தாராம். அந்த சமயத்தில் அதே ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் அங்கு கபடி விளையாடிக் கொண்டிருந்தனராம்.

சிறிது நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மழை வரும் என்பதை அறிந்து தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். ஆனால் மணி அயர்ந்து தூங்கியுள்ளார். அந்த சமயத்தில் திடீரென அங்கு இரண்டு பைக்குகளில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் தூங்கி கொண்டிருந்த மணியை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளது. இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் அதிகமாக வெட்டு விழுந்துள்ளது.

அதன்பின்னர் அந்த வழியாக வந்த நபர் சத்தமிடமே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதில் வெட்டுக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மணி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணியின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் குற்றவாளிகளை கைது செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே இறந்தவர் உடலை பெற்றுக் கொள்வோம் என்று ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் குற்றவாளிகளை பிடிப்பதற்காக மாவட்ட எல்லைகளில் போலீசார் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். மரத்தடி நிழலில் படுத்து தூங்கி கொண்டிருந்த ஆடுமேய்க்கும் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 13 Nov 2023 2:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா