/* */

ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாத பெருமாள் கோவிலை சுற்றி சுத்தம் செய்ய மத்திய நிதியமைச்சர் உத்தரவு

ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாத பெருமாள் கோவிலை சுற்றி சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாத பெருமாள் கோவிலை சுற்றி சுத்தம் செய்ய மத்திய நிதியமைச்சர் உத்தரவு
X

ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாத பெருமாள் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதி பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேற்று பார்வையிட்டார். மழை வெள்ளச் சேதம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த புகைப்படங்களை அவர் பார்வையிட்டார். அப்போது, மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் அதிகாரிகள் அவரிடம் விளக்கினர்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் மழை வெள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சுமார் இரண்டு மணி நேரம் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மழை பாதிப்புகள் மற்றும் நிவாரணம், சீரமைப்பு பணிகள், அதற்கு தேவையான நிதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய 72 பக்க அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் வழங்கினார்.

இதையெடுத்து, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட குறிஞ்சி நகரை பார்வையிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அங்கு மாநகராட்சி நிர்வாகம் மூலம் தண்ணீர் வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட மத்திய நிதியமைச்சர், அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, 6 கிலோ மீட்டர் நீளம், 3 கிலோ மீட்டர் அகலம் கொண்ட கோரம்பள்ளம் குளத்தை சரியாக தூர்வாரவில்லை என்றும் கரையை சரியாக பலப்படுத்தவில்லை என்றும் காலாங்கரை பகுதி விவசாயிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உடைப்பு ஏற்பட்ட அந்தோணியார்புரம் பகுதியில் நேரில் சென்று பார்வையிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அதன் பிறகு, ஏரல், ஸ்ரீவைகுண்டம், மணத்தி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிலையில், நவதிருப்பதிகளில் முதலாம் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாத பெருமாள் கோவில் பகுதிக்கு சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பார்வையிட்டபோது, அங்குள்ள பக்தர்கள் கோவிலை சுற்றி அசுத்தமாக இருப்பதாகவும், பிரமோட்சவம் நடைபெறும்போது பெருமாள் ஊர்வலம் செல்லமுடியாத நிலை நிலவுவதாகவும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கிருந்த அறநிலையத் துறை அதிகாரிகளிடம் உடனடியாக கோவிலை சுற்றி சுத்தம் செய்து வேலி அமைக்கும்படி நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உத்தரவிட்டார்.

Updated On: 27 Dec 2023 6:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  6. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  7. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  8. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  9. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  10. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்