/* */

விவசாயிகளிடம் கொள்முதல்: 14லட்சம் மோசடி

பணத்தை கேட்டால் மிரட்டல்.! விவசாயிகள் பரிதவிப்பு..!

HIGHLIGHTS

விவசாயிகளிடம் கொள்முதல்: 14லட்சம் மோசடி
X

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள கிராமம் மேலக்கரந்தை. இந்த கிராமத்தின் பிரதான தொழில் விவசாயம் தான். மக்காச்சோளம், பருத்தி, பாசி, உளுந்து, மல்லி, கம்பு உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த கிராமத்தினை சேர்ந்த 41 விவசாயிகளிடம் விருதுநகர் மாவட்டம் திருமலபுரம் அகரத்துபட்டியை சேர்ந்த குருசாமி என்பவரது மகன் முத்துமுருகன் என்பவர் தான் விவசாய பொருள்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருவதாக கூறி, தனக்கு விவசாய விளைபொருள்கள் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையெடுத்து 41 விவசாயிகள் தங்களிடமிருந்து மக்காச்சோளம், உளுந்து , மல்லி ஆகியவற்றை முத்துமுருகனிடம் விற்பனை செய்துள்ளனர். விவசாய பொருள்களை வாங்கிய முத்துமுருகன் ஒரு வாரத்தில் 41 பேருக்கும் பணம் தரப்படும் என்று கூறியுள்ளார். இதையெடுத்து விவசாயிகள் ஒரு வாரத்தில் தங்களுக்கு பணம் கிடைத்து விடும் என்று நம்பி இருந்துள்ளனர். ஆனால் 10 நாள்களுக்கு மேலாகியும் பணம் வரவில்லை என்பதால் விவசாயிகள் முத்துமுருகனை தொடர்பு கொண்ட போது இன்று, நாளை என்று இழுத்தடித்துள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால் காவல்துறையை நாட வேண்டி இருக்கும் என்று விவசாயிகள் கூறியதும். விவசாயிகளுக்கு தர வேண்டிய 14 லட்ச ரூபாய்க்கு 4 லட்சம் வீதம் 3 காசோலை வழங்கியுள்ளார். மீதமுள்ள தொகை பிறகு தருவதாக கூறியுள்ளார்.

இதையெடுத்து காசோலையை வாங்கிய விசாயிகள் தங்களுக்கு பணம் கிடைத்துவிடும் நம்பிக்கையில் ஒரு காசோலையை வங்கியில் செலுத்த அது பணம் இல்லை என்று தெரிந்ததும் வேதனை அடைந்தது மட்டுமின்றி, முத்துமுருகன் வீட்டிற்கு சென்று பணத்தினை கேட்டுள்ளனர்.

அப்போது வீட்டில் இருந்த முத்துமுருகன் தந்தை குருசாமி ஒரு மாத்திற்குள் விவசாயிகள் பணத்தினை கொடுத்துவிடுவோம் என்று கூறியதாக தெரிகிறது. இதையெடுத்து அமைதியாக வீடு திரும்பிய விவசாயிகள் குருசாமி ஒரு மாதம் கழித்து நேற்று மீண்டும் முத்துமுருகன் வீட்டிற்கு அவர் தந்தையிடம் பணத்தினை கேட்டுள்ளனர். அதற்கு விவசாயிகளை பார்த்து முத்துமுருகன் தந்தை பணம் தரமுடியாது என்று கூறியது மட்டுமின்றி கொலை மிரட்டல் விடும் தோணியில் பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திருச்சுழி டி.எஸ்.பி. அலுவலகம், முத்துமுருகன் சொந்த ஊர் எல்கைக்குள் வரும் ரெட்டியர்பட்டி காவல் நிலையம், மேலும் மேலக்கரந்தை ஊர் எல்கைக்குள் வரும் மாசார்பட்டி காவல் நிலையம் ஆகியவற்றில் தங்களது புகார் மனுவினையும் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கை இல்லை என்று விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

வறட்சி, மழை என்று பார்க்கமால் மிகவும் கஷ்டப்பட்டு பாடுபட்டு மகசூல் செய்த நிலையில் தற்பொழுது ஏமாந்து போய் இருப்பதாகவும், காவல்துறையின் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என்பதால் என்ன செய்துவது என்று தெரியமால் திகைத்து வருவதாகவும், முத்துமுருகனின் தந்தை குருசாமி அமமுகவில் நிர்வாகியாக இருப்பதாகவும், முத்துமுருகனின் சகோதரர் ஒருவர் சென்னையில் காவல்துறையில் இருப்பதால் நடவடிக்கை எடுக்கமால் காலம் தாழ்த்தி வருவதாகவும், மேலும் முத்துமுருகன் தங்களை போன்று பல விவசாயிகளிடம் பொருள்களை கொள்முதல் செய்து, பணம் தரமால் ஏமாற்றியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தங்களுக்குரிய பணம் கிடைக்கவில்லை என்றால் விவசாயத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியமால் போய்விடுவது மட்டுமின்றி. அடுத்து விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்பதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

Updated On: 23 April 2021 2:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  3. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  4. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  5. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  6. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  7. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  8. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  9. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  10. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!