/* */

ரயில்வேக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு

ரயில்வேக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு அளித்து உள்ளது.

HIGHLIGHTS

ரயில்வேக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து  நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு
X

பைல் படம்

திருவாரூர் ராமநாதன் நகரை சேர்ந்த வடிவேலு என்பவரது மகன் மதியழகன். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மதியழகன் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி பாமினி விரைவு ரயிலில் திருப்பதியில் இருந்து திருவாரூருக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்துள்ளார். இந்த ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் பயணச்சீட்டை இணையதளம் மூலம் ரத்து செய்துள்ளார். இவருக்கு ரயில்வே துறையிலிருந்து 525 ரூபாய் திரும்ப வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மதியழகன் திருவாரூர் ரயில் நிலைய பயணச்சீட்டு வழங்கும் இடத்திற்கு சென்று பயணச்சீட்டு செய்தற்கான தொகையை கேட்டுள்ளார். ரயில்வே அதிகாரி இணையதளம் வாயிலாக பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாலும், 4 தினங்களுக்கு பிறகு ரத்து தொகையை கேட்பதாலும் இங்கு வழங்க இயலாது என கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து மதியழகன் தனது பயண சீட்டு ரத்து தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி மனுதாரருக்கு பயணச் சீட்டு ரத்து தொகை 525 ரூபாயை 9% வட்டியுடனும், வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 மற்றும் மனுதாரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூபாய் 2 லட்சம் அபராதமும் விதித்து அதிரடியாக தீர்ப்பளித்தார். இந்த தொகையை இரண்டு மாதத்திற்குள் மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டார்

Updated On: 28 April 2022 2:49 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!