/* */

திருவாரூர் மாவட்ட குறை தீர்க்கும் கூட்டத்தில் 236 கோரிக்கை மனுக்கள்

திருவாரூர் மாவட்டத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 236 மனுக்கள் பெறப்பட்டது.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்ட குறை தீர்க்கும் கூட்டத்தில்  236 கோரிக்கை மனுக்கள்
X
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளி ஒருவருக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் சக்கர நாற்காலி வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 236 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

அதனைதொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 நபருக்கு ரூபாய் 7,800 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Nov 2021 5:49 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்