உபகரணங்கள் வாக்குசாவடிகளுக்கு அனுப்பும் பணி

வாக்குபதிவிற்கு தேவையான எழுதுபொருட்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வாக்குசாவடிகளுக்கு அனுப்பும் பணியினை,மாவட்ட தேர்தல் அலுவலருமான வே.சாந்தா. ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உபகரணங்கள் வாக்குசாவடிகளுக்கு அனுப்பும் பணி
X

திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குபதிவிற்கு தேவையான எழுதுபொருட்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வாக்குசாவடிகளுக்கு அனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலருமான வே.சாந்தா.ஆய்வு செய்தார்.

மேற்கொண்டு உரிய காலத்தில் வாக்குசாவடிகளுக்கு எடுத்துசெல்கின்ற வகையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா கேட்டறிந்தார்.

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு பொது பார்வையாளர்கள் செலவின பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அந்தவகையில், 166.திருத்துறைப்பூண்டி மற்றும் 167.மன்னார்குடி சட்டமன்றப் பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளராக சந்திரமோகன் பிரசாத் காஸியாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்தொகுதிகளுக்கான தேர்தல் தொடர்பான புகார்களை 04366-291072 என்ற தொலைபேசி எண்ணிலும், எழுத்து மூலமாக புகார்களை 9025822634 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தெரிவிக்கலாம். மேலும், திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி சட்டமன்றப் பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக அருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களாக: 166-திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு (தனி) மாவட்ட வழங்கல் அலுவலர், திருவாரூர் - கைபேசி எண்: 9445000295,

167.மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு வருவாய் கோட்ட அலுவலர், மன்னார்குடி - கைபேசி எண்: 9445000463,

168.திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு வருவாய் கோட்ட அலுவலர், திருவாரூர் - கைபேசி எண்: 9445000464,

169.நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உதவி ஆணையர் (கலால்), திருவாரூர் - கைபேசி எண்: 9443486537 நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும், தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பான புகார்களை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

1. 166 திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04366-226662,

2. 2. 167.மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04366-226663,

3. 3. 168-திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04366-226664,

4. 4. 169-நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04366-226665

மேலும், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தேர்தல் கட்டுபாட்டு அறையின் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மற்றும் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தொலைபேசி எண்: 04366-290126 எண்ணுக்கும் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான இறுதி கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அலுவலருமான.வே.சாந்தா பார்வையிட்டார்.

இவ்ஆய்வில் திருத்துறைப்பூண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சக்திவேல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் வட்டாட்சியருமான ஜெகதீஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 April 2021 4:30 PM GMT

Related News

Latest News

 1. தாராபுரம்
  திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
 2. பெரம்பலூர்
  பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
 3. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர்...
 4. திருக்கோயிலூர்
  கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
 5. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
 6. மயிலாடுதுறை
  ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய...
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
 8. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 9. குன்னூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 10. குன்னூர்
  ஊட்டி மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகள் வெடி வைத்துத் தகர்ப்பு: சேவை...