/* */

மத்திய துணைக்கண்காணிப்புக்குழுவிடம் சீறிய தமிழக பொதுப்பணித்துறை

முல்லைப்பெரியாறு அணையினை ஆய்வு செய்ய வந்த துணைக்கண்காணிப்புக்குழுவிடம் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி கடுமையாக சீறியுள்ளார்.

HIGHLIGHTS

மத்திய துணைக்கண்காணிப்புக்குழுவிடம்  சீறிய தமிழக பொதுப்பணித்துறை
X

முல்லைப்பெரியாறு அணையினை ஆய்வு செய்த துணை கண்காணிப்புக்குழு (பைல் படம்)

முல்லைப்பெரியாறு அணையினை பார்வையிட மத்திய அரசின் துணைக்கண்காணிப்புக்குழு வந்தது. இந்த குழு வழக்கம் போல் அணையினை ஆய்வு செய்து விட்டு, அணை பலமாக உள்ளது என்ற முடிவுக்கு வந்தது. இந்த குழு கேரளாவில் ஒண்ணாம் மைலில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பொதுப்பணித்துறை கோட்டப்பொறியாளர் சாம்இர்வின் துணைக்கண்காணிப்புக்குழுவிடம் பொறிந்து தள்ளி விட்டார்.

அவர், கண்காணிப்புக்குழுவிடம் மிகவும் சத்தமான குரலில் சண்டையிடுவது போன்றே பேசியுள்ளார். சார், நீங்கள் வந்த நோக்கம் என்ன? அணை பலமாக உள்ளது என்பதை உறுதிப்படுத்தி விட்டீர்கள்? அதனால் என்ன பலன்.? பேபி அணையினை பலப்படுத்த இடையூறாக உள்ள 14 மரங்களை வெட்ட அனுமதி வாங்கித்தரப்போகிறீர்களா? இல்லையா? பொதுப்பணித்துறை அதிகாரிகள் குடியிருப்பினை சீரமைக்க, பராமரிக்க தளவாடங்கள் கொண்டு செல்லக்கூட கேரளா அனுமதி வழங்க மறுக்கிறது. இதற்கு என்ன தீர்வு பெற்றுத்தரப்போகிறீர்கள்.

அணையின் நீர் மட்டத்தை குறைக்க நீங்கள் 'ரூல்கர்வ்' முறையினை அமல்படுத்தி விட்டீர்கள்? ஆனால் பலமாக உள்ள அணைக்கு ரூல்கர்வ் எதற்கு? தண்ணீரை மழைக்காலத்தில் சேமிக்காமல் எப்போது சேமிக்க முடியும்? கேரளா மட்டும் நினைத்ததை செய்கிறதே? தமிழக அதிகாரிகள் அவர்களிடம் கை கட்டி வேலை செய்யும் வேலையாட்களா? நீங்கள் யாரிடம் சம்பளம் வாங்குகிறீர்கள் என விவசாயிகள் எங்களை சட்டையை பிடித்து கேள்வி கேட்கிறார்கள். இதற்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை.

துணைக்கண்காணிப்புக்குழுவும், மத்திய கண்காணிப்புக்குழுவும் கேரளாவிற்கு வேலை செய்ய அமைக்கப்பட்ட குழுக்கள் போல் செயல்படுகிறதே தவிர, தமிழகத்தின் பக்கம் இருக்கும் நியாயத்தையும், தமிழக விவசாயிகளின் பரிதவிப்பையும் புரிந்து கொண்டு செயல்படவில்லை. முறையான தீர்வு உங்களால் தர முடியாவிட்டால் எதற்கு இந்தக்குழு எங்களை விட்டு விடுங்கள்.இனிமேலும் தமிழக விவசாயிகளின் கண்களை துணி கட்டி மறைக்க முடியாது? என பொறிந்து தள்ளி விட்டார்.

இதனை கேட்ட துணைக்கண்காணிப்புக்குழு அதிகாரிகள் அத்தனை பேரும் ஆடிப்போய் விட்டனர். இதனை கவனித்துக் கொண்டு இருந்த கேரள பத்திரிகையாளர்கள் கூட தமிழக அதிகாரி சாம்இர்வினின் கோபமான பேச்சை கேட்டு ஆடிப்போய் விட்டனர். ஒரு வழியாக சாம்இர்வினை சமரசம் செய்த துணைக்கண்காணிப்புக்குழுவினர், 'இப்பிரச்சினைக்கு தெளிவான தீர்வு காண்போம்' என சமரசம் செய்து விட்டு சென்றனர்.

தமிழக அதிகாரியின் வீராவேசத்தை கண்ட தமிழக விவசாயிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 20 July 2022 10:53 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  2. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  3. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  4. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  10. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது