/* */

ரஷ்யா, அமெரிக்காவுடன் உறவை இந்தியா எப்படி பேலன்ஸ் செய்கிறது?

இந்தியாவின் ராஜதந்திரம் எளிமையானது, அது பற்றி பார்க்கும் முன், இந்திய வெளியுறவு கொள்கை பற்றியும் அவசியம் அறிய வேண்டும்.

HIGHLIGHTS

ரஷ்யா, அமெரிக்காவுடன் உறவை  இந்தியா எப்படி பேலன்ஸ் செய்கிறது?
X

பைல் படம்

மோடி ஆட்சி அமைக்கும் முன்பு வரை நமது ராஜதந்திரம் என்பது ஏதாவது ஒரு நாட்டின் பின்னால் நிற்பதாகவே இருந்தது. நம் ஆயுதங்களுக்காக ரஷ்யாவை சார்ந்திருந்தோம். இன்னும் சொல்லப்போனால் வாஜ்பாய் ஆட்சிக்கு பின்னால் காங்கிரஸ் ஆட்சியில் எந்தவொரு பெரிய அளவிளான தளவாடங்கள் மட்டுமல்ல, தோட்டாக்கள் கூட வாங்க முடியாத மோசமான பொருளாதார சூழல் உருவானது.

2014 மோடி ஆட்சிக்கு வந்தார். எல்லா முக்கிய நாடுகளின் தலைவர்களையும் நேரில் சந்தித்தார். அதன் மூலம் இந்தியா மீது அவர்கள் வைத்திருந்த புரிதலை தெரிந்து கொண்டும், அதில் வேண்டிய திருத்தங்களை செய்யவும் உதவியது. அப்போது மோடி உலக சுற்றுலா வாசியாகி விட்டதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அதுவரை நம்மை ஒரு கடன்காரனாக பார்த்த OPEC நாடுகளிடம் பேரம் பேசும் தகுதி இல்லாத சூழலை முற்றிலும் நீக்க இடையூறாக இருந்த பெரும் கடனை கட்டி முடித்தார். அதற்கு பெட்ரோல், டீசல் மீது போட்ட வரிகள் முக்கியம். அந்த கடன்கள் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், இந்தியா சொன்ன ஒரு விஷயம், 'பாகிஸ்தானுக்கு நீ உதவினால், நான் உன்னிடம் கச்சா எண்ணெய் வாங்க மாட்டேன் என்பது தான். எனவே வேறு வழியில்லாமல் அவை நிறுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தியது தான் பாகிஸ்தானுக்கு விழுந்த முதல் அடி.

ISIS தாக்குதலில் மேற்கத்திய நாடுகள் கூட தங்களது குடிமக்களை திரும்ப பெற முடியாமல் போன போது, இந்தியா நம் குடிமக்களை மீட்டது. அது முதல் தொடர்ந்த நமது வெளியுறவுக் கொள்கையின் வெற்றி உக்ரைனில் இந்திய மாணவர்களை மீட்பதற்காக இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தி வைக்கும் அளவிற்கு நம் முக்கியத்துவம் பெற்றிருந்ததை பார்த்து உலகம் வியந்தது. பாகிஸ்தானின் உற்ற நண்பனான உக்ரைன், இந்தியா நினைத்தால் இந்த போரை நிறுத்த முடியும் என்று சொல்லி போரை நிறுத்தச்சொல்லி கோரியது. சமீபத்தில் ஆஃப்கானிஸ்தானில் மாட்டிக்கொண்ட பணய கைதிகளை விடுவிக்கவெல்லாம் முடியாது, வேண்டுமானால பேசி பார்க்கலாம் என்று சொன்ன தலிபான்களிடம், 22 மணி நேரம் கொடுக்கிறோம். விடுதலை செய்யா விட்டால்? என்று நிறுத்தியது. 8 மணி நேரத்தில் ஒரு சிறு காயம் கூட இல்லாமல் பயணிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள். அதற்கு முன்பு நம் விமானக் கடத்தப்பட்டதை ஒப்பிட்டு பாருங்கள்?!

உக்ரைன் போரில் ரஷ்யாவை தனிமைப்படுத்த உலக நாடுகள் எதுவும் ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று கட்டளை இட்ட போது, இந்தியா அதை மீறியது. இந்தியா மீது பொருளாதார தடையை விதிப்பேன் என்ற நாடுகளையெல்லாம், இந்தியா கூலாக முடிந்தால் செய்து பார் என்றது. ஐரோப்பிய நாடுகள் இந்தியாவிற்கு மறைமுகமாக எச்சரிக்கை செய்தது. எங்களுக்கு இடம் கட்டளையினை முதலில் நீங்கள் பின்பற்றுங்கள், அதன் பின்னர் ஊருக்கு உபதேசம் செய்யுங்கள் என்று மூஞ்சியில் அடித்து பதில் சொன்னது இந்தியா.

இதுவரை இப்படி ஒரு ஆக்ரோஷமான நிலைப்பாட்டை அதன் 75 ஆண்டுகால வரலாற்றில் பார்த்திராத அமெரிக்கா, இந்தியாவில் மத சுதந்திரமில்லை என்று தனது வழக்கமான உள்குத்து வேலையை செய்தது. அது பற்றி கேட்டபோது, நம் வெளியுறவுத்துறை அமைச்சர், கருப்பின் மக்களுக்கு அமெரிக்கா கொடுக்கும் சுதந்திரம் எந்த வகை சுதந்திரம் என்று அவர்கள் மண்ணிலேயே திருப்பி கேட்டபோது அமெரிக்கா ஆடித்தான் போனது.

இஸ்லாமிய கூட்டமைப்பில் உள்ள நாடுகளை வைத்து அமெரிக்கா மிரட்டியது. பதிலுக்கு இந்தியா, நீ என்னடா என்னை எச்சரிப்பது என்று ரஷ்யாவிடம் $30 குறைவாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. வெறும் 2% ரஷ்ய இறக்குமதியாக இருந்தது, சவூதியை தாண்டி இரண்டாவது பெரிய இறக்குமதியாக மாறியபோது, அதே நாடுகள் இன்று நாங்கள் ரஷ்யாவை விட குறைவாக தருகிறோம் என்று இந்திய காலில் மண்டியிட்டன.

எதெற்கெடுத்தாலும் மிரட்டிய சீனா, டோக்லாமில் பூடானை மிரட்ட கால் வைத்து அசிங்கப்பட்டது. பின்பு லடாக்கில் உள் நுழைந்து பெரும் அடி வாங்கியது. அருணாச்சல பிரதேசம் என்னுடையது, அங்கே இந்தியர்கள் யாரும் சீனாவின் அனுமதியின்றி நுழையக்கூடாது என்ற எச்சரித்தது. இந்திய ஜனாதிபதி அங்கே சென்றார். இப்படி எத்தனையோ நெருக்கடிகள்? ஆனால், அதன் உண்மையான பலமான வர்த்தகத்தில் கைவத்தது இந்தியா. அதன் செல்போன்கள் உற்பத்தியில் இருந்து, போர் விமானங்கள் வரை அதற்கு, தரமான பொருட்களால் போட்டியை ஏற்படுத்தி வெற்றியை பதிக்க தொடங்கியுள்ளது. அது மட்டுமா, வியட்நாம் உட்பட சீனாவின் எதிரிகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை கொடுத்து, சீனாவின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியது.

கொரானாவை பரப்பிய நாடு என்று சீனா அசிங்கப்பட, அதற்கு தடுப்பூசிகளை இலவசமாக கொடுத்து ஃபார்மாசுட்டிகல் மாஃபியாவை மீறி கொரானாவை தடுத்த தாயுள்ளம் கொண்ட நாடு என்ற பெயரை இந்தியா வாங்கியது. இன்று தைவான் மட்டுமல்ல, திபெத்தையும் சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் வழியை இந்தியா முன்னெடுக்கிறது.

இலங்கை சீனாவால் திவால் ஆனபோது யாரும் உதவாதபோது, மருந்து முதல் அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவிய இந்தியாவிற்கு, அது செய்த கைமாறு ஹம்பந்தோட்டாவில் சீனாவிற்கு கொடுத்த அனுமதி. சீனாவுடன் சேர்ந்து நம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வருமோ என்று பயப்படவில்லை, மாறாக இந்திய உதவிகள் குறைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, ஐநா சபையில் தமிழர்களுக்கான முழு சுதந்திரத்தை இலங்கை உடனே செய்தாக வேண்டும் என்று, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அழுத்தமாக தன் கோரிக்கையை எழுப்பி, உன்னை எப்படி வழிக்கு கொண்டு வரவேண்டும் என்பது எனக்கு தெரியும் என்று கோடிட்டு காட்டியுள்ளது.

நம் படை வீரர்களின் தலையை கொய்து நமக்கு பரிசாக பாகிஸ்தான் எல்லையில் கொடுத்தபோது, கையறு நிலையில் இருந்த இந்தியா, பதான் கோட்டில் நுழைந்து தீவிரவாதிகளின் கூடாரத்தை தாக்கி 300+ கூண்டோடு கொன்றபோது, அதை வெளியே கூட சொல்லமுடியாமல் அசிங்கப்பட்டது பாகிஸ்தான். அதில் அமெரிக்காவின் F16 வகை விமானத்தை வெறும் Mig 21 மூலம் வீழ்த்தி அமெரிக்காவிற்கு அசிங்கத்தை பரிசாக்கியது. எல்லைக்கு அப்பால் இருந்து தாக்கி ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டால், அங்கே நான்கு பேர் கொல்லப்படவேண்டும் என்று ராணுவத்திற்கு சுதந்திரம் கொடுத்தது இந்திய அரசு. இன்று பாகிஸ்தானை இஸ்லாமிய நட்பு நாடுகள் கூட பிச்சைக்காரனை பார்ப்பதுபோல பார்க்கிறார்கள் என்று அந்நாட்டின் பிரதமர் நொந்துபோய் சொன்னார். பல பிரச்சினைகள் இருந்தாலும், கடந்த காலங்களில் பாகிஸ்தான் இயற்கை பேரழிவை சந்தித்தபோது முதலில் ஆதரவுக்கரம் நீட்டியது இந்தியாதான். ஆனால் ஒவ்வொரு முறையும் முதுகில் தான் பாக்கிஸ்தான் குத்தியது. இதனால் சுதாரித்துக் கொண்ட இந்தியா தற்போது பாக்கிஸ்தான் பிச்சை எடுக்கும் நிலையில் இருந்தாலும், வெறும் ட்வீட் செய்ததோடு நிறுத்திக் கொண்டது இந்தியா.

மலேஷியா முதல் துருக்கி வரை பாகிஸ்தான் பக்கம் சாய்ந்த போது, இந்தியா கொடுத்த பதில்கள் வித்தியாசமானது. பாமாயில் இறக்குமதியை குறைத்து மலேசியாவை மண்டியிட வைத்தது. துருக்கியின் பரம எதிரியான கிரீஸுக்கு பிரம்மோஸ் ஏவகணைகளை கொடுத்து, எனக்கும் விளையாட தெரியும் என்று பதில் சொல்லியது.

அமெரிக்காவாலும், சீனாவாலும் நம்பி ஒப்பந்தமிட்டு வறுமையை பரிசாக வாங்கிய ஆஃப்ரிக்க நாடுகள் இன்று தன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கோருவது இந்தியாவிடம்தான். ஒரு பக்கம் QUAD நாடுகளின் கூட்டமைப்பில் ஒத்திகை செய்யவும், லடாக்கில் அமெரிக்காவுடன் சீன எல்லையில் போர் ஒத்திகை செய்து கொண்டே ரஷ்யாவில் போர் பயிற்சி செய்ய சென்றது இந்தியா. அங்கே ரஷ்யாவிற்கும், ஜப்பானுக்கும் பிரச்னையான தீவுகளில் நடக்கும் பயிற்சியில் கலந்து கொள்ளாமல், தவிர்த்ததை ஜப்பான் வெகுவாக பாராட்டியிருக்கிறது. இந்தியாவின் ஸ்திரமான முடிவுகளை நம் பரம வைரிகளான பாகிஸ்தானும், சீனாவும் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளும் பாராட்டி உள்ளன.

இதெல்லாம் எப்படி நடந்தது?

இந்தியா, மற்றவர்களுக்காக தனது கொள்கையை முடிவு செய்யாமல், தனது நிலைப்பாட்டிற்கு ஏற்பவே அதன் கொள்கை முடிவுகள் இருந்ததால், அதில் எந்த குழப்பமும் இல்லை. இதைத்தான் பாகிஸ்தான் முதல் ஜெர்மனி வரை பாராட்டியிருக்கிறது. அது நம்மை பலப்படுத்தலாம், ஆனால் ஏன் பாராட்டப்பட வேண்டும்? இந்தியா நியாயத்தை முன்னால் நிறுத்தி அதன்பின் கொள்கையை வகுத்தது.

ஆம், அமெரிக்காவிடம் சீனாவை காட்டி கொடுத்தும், ரஷ்யவிடம் அமெரிக்காவை போட்டு கொடுத்தும் இந்தியா தனக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவில்லை. அதற்கு மாறாக, உக்ரைன் போரில் ரஷ்யா மீது தடை விதிக்க கோரியபோது, ரஷ்யாவிடம் இருந்த நியாயத்தை முன்னால் நிறுத்தி, அமெரிக்காவின் தவறுகளை நீ எப்படி அதை செய்யலாம் என்று கேட்டது. அதற்கு அமெரிக்காவால் பதில் சொல்ல முடியவில்லை. வல்லரசான அமெரிக்கா உட்பட உலகமே சீனாவை பார்த்து பயந்த போது, சீனாவின் குரல்வளையை பிடித்து தன் வீரத்தை காட்டியது இந்தியா. மிக பலமான ஐரோப்பிய யூனியன்கள் இந்தியாவை ரஷ்யாவிடம் இருந்து பிரிக்க முயன்றபோது, நீ அதை முதலில் செய்துவிட்டு, பின்னர் எனக்கு அறிவுரைப்பது பற்றி பேசலாம் என்றது, அதற்கு மேல் அதனால் பேச முடியவில்லை.

இன்று ஆப்ரிக்க நாடுகளுக்கு $21 பில்லியன் கடன் கொடுத்த சீனா, அவற்றின் துறை முகங்களையும், இயற்கை வளங்களையும் அடமானமாக எழுதி கேட்டது. ஆனால் $14 பில்லியன் கடன் கொடுத்த இந்தியா, அதன் நிலை அறிந்து மேலும் உதவுகிறது. அதனால் ஆஃப்ரிக்க நாடுகள் இந்தியாவை நம்பி அதன் இயற்கை வளங்களை கூட்டாக தொழில்.செய்ய அழைக்கிறது. ஆம், அவை அமெரிக்காவாலும், சீனாவாலும் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு, அதன் தோல்வியில் இருந்து கற்ற வறுமை எனும் பாடம் அதற்கு வழி சொல்லுகிறது.

இதெற்கெல்லாம் காரணம் இந்தியாவின் பொருளாதார, ஆயுத பலம் மட்டுல்ல. நம்மிடம் இருக்கும் நியாயம். அந்த நியாயத்தின் பின்னால் நின்றதால் வலிமையான அமெரிக்காவிடம் மண்டியிடவுடவுமில்லை, அரக்கனான சீனாவிடன் அஞ்சி ஒதுங்கவும் இல்லை. நேர்மையை முன் வைத்து அது யாராக இருந்தாலும் கேள்வி கேட்கும் நிலைக்கு இந்தியா உயர்ந்து உள்ளது. அதனால் தான் இந்தியாவை உலகத்தின் வல்லரசாக உலக நாடுகள் பார்க்காமல், உலகத்தின் குருவாகத்தான் பர்க்கின்றன. குரு வெறும் நியாயம் சொல்பவன் மட்டுமல்ல, நியாயம் தவறியவனை தட்டிகேட்கும் வலிமை கொண்டதால்தான் உலகம் திரும்பி பர்க்கிறது, மதிக்கிறது, உறவுகொள்ள முன்வருகிறது.

Updated On: 18 Sep 2022 11:19 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்