/* */

தேனி நகராட்சி பகுதிகளில் பாலிதீன் பைகள் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு

தேனி நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு பல மடங்கு உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

தேனி நகராட்சி பகுதிகளில் பாலிதீன் பைகள்  பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு
X

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான மாதிரி படம்.

தேனி நகராட்சி பகுதிகளில் பாலிதீன் பொருட்களின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி நகராட்சி பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பாலிதீன் பொருட்கள் விற்பனைக்கும், பயன்பாட்டிற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் மக்களிடையே இதன் பயன்பாடும் குறைந்தது. இந்நிலையில் சில மாதங்களாக நகராட்சி சுகாதாரத்துறையின் கவனம் டெங்கு தடுப்பு, கொரோனா தடுப்பு பணிகளின் பக்கம் திரும்பியது. இந்நிலையில் நகர் பகுதிகளில் மெல்ல, மெல்ல அதிகரிக்க தொடங்கிய பாலிதீன் பயன்பாடு தற்போது முழுமையாக அதிகரித்துள்ளது.

நகராட்சியில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், பலசரக்கு கடைகளில் கூட பாலிதீன் பைகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். குறிப்பாக ஆடு, கோழி, மீன் இறைச்சிக்கடைகளில் தான் பாலிதீன் பைகள் 100 சதவீத பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனை தடுக்காவிட்டால் நகராட்சியின் சுற்றுப்புற சுகாதாரம் மீண்டும் கடுமையாக சீர்கேடு அடைந்து விடும். இதனை தடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் மவுனம் காத்து வருகிறது. எனவே, சுகாதாரத்துறை விழித்துக் கொண்டு மீண்டும் தேனி நகராட்சி பகுதிகளில் பாலிதீன் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 2 Aug 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  3. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  4. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  5. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  6. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  8. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  9. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  10. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!