/* */

உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் ஈடுபடும் டாக்டர்கள்

தமிழகத்தில் டாக்டர்கள் பலர் விவசாயம் செய்தல், ஆடு, மாடு, கோழி வளர்த்தல் போன்ற இயற்கையான வாழ்வு முறைகளை தங்கள் வாழ்வில் இணைத்துள்ளனர்.

HIGHLIGHTS

உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் ஈடுபடும் டாக்டர்கள்
X

பைல் படம்.

டாக்டர்கள் தங்களது உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியத்தை மேம்படுத்த விவசாய பணிகளிலும், ஆடு, மாடு, கோழி வளர்ப்பிலும் ஈடுபடுகின்றனர்.

''எல்லாரும் படிச்சு வேற வேலைக்கு போயிட்டாங்க... விவசாயம் செய்யும் கடைசி தலைமுறை நாங்களாத்தான் இருப்போமோ அப்படீன்னு பயமாயிருக்கு'' இப்படி ஒரு புலம்பல் தமிழக கிராமங்களில் மட்டுமில்லை. நாடு முழுவதுமே கேட்கிறது.

ஆனால் அது உண்மையில்லை. நாங்கள் எம்.டி., எம்.எஸ்., டி.எம்., என பல்வேறு உயர் மருத்துவ படிப்புகள் படித்திருந்தாலும், விவசாயம் செய்கிறோம்; ஆடு, மாடு, கோழி வளர்க்கிறோம் பாருங்கள் என டாக்டர்கள் நிரூபித்து வருகின்றனர்.

பொதுவாகவே டாக்டர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஒரு இடைவெளி இருக்கும். இந்த இடைவெளி சமூகத்தின் அனைத்து தரப்பிலும் ஊடுருவி, 'யாருமே டாக்டர்களுடன் மிகவும் நெருக்கமாக பழக முடியாது. அவர்கள் ஒரு உயர் அந்தஸ்து கொண்ட மரியாதைக்குரிய சமூகம்' என்ற நினைப்பே பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அத்தனை பேரிடமும் ஊடுருவி இருக்கிறது.

இதனால் எத்தனை செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தாலும், டாக்டர்கள் இந்த சமூகத்தில் கலந்து, சமூகத்தின் பிற பிரிவினர் அனுபவிக்கும் இன்ப, துன்பங்களை அனுபவிக்கவே முடியாது. அதாவது அவர்கள் தங்க கூண்டுக்குள் அடைக்கப்பட்ட சிறைப்பறவை போலத்தான் வாழ வேண்டி உள்ளது. ஏற்கனவே நோயாளிகளுடனே பொழுது போக்கும் டாக்டர்கள் பெரும்பாலும் மனஅழுத்ததில் தான் இருப்பார்கள். இதில் அவர்களை பிரித்துக்காட்டி சமூகமும் மறைமுக அழுத்தம் கொடுத்து வருகிறது.

இப்படி சமூகத்தின் எந்த பிரிவினருடனும் கலக்க முடியாமல் தனித்து விடப்பட்ட டாக்டர்கள் சமூகம் தனது மன ஆறுதலை தீர்க்க கூட வழியின்றி தவிப்பது அத்தனை பேருக்கும் தெரியும். மதுவோ, இதர போதைப் பொருட்களோ டாக்டர்களை முழு திருப்திப்படுத்தவே முடியாது என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் அவர்கள் தான் டாக்டர்களாயிற்றே... எதை எவ்வளவு துாரத்தில் நிறுத்தணும்னு அவர்களுக்கு தானே தெரியும்.

இப்படி சமூக பிரிவினையில் சிக்கித் தவிக்கும் டாக்டர் சமூகம் தங்களுக்கு வடிகாலாக மிகப்பெரிய வழிமுறைகளைக் கண்டறிந்து கடைபிடித்து வருகின்றனர். அது தான் விவசாயம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு தொழில். அதாவது டாக்டருக்கு படிப்பவர்கள் ஒன்று பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இல்லாவிட்டால் டாக்டராகி சில ஆண்டுகளில் பணக்காரர்களாகி விடுவார்கள். இது தான் உண்மை. இதனால் அவர்கள் நிலம் வாங்குவது மிகவும் எளிது.

டாக்டர்களில் மிகப்பெரும்பாலானோர் தங்களது வருவாயினை நிலத்தில் முதலீடு செய்து, அந்த நிலத்திற்குத் தினமும் சென்று விவசாயம் செய்கின்றனர். நம்ப முடியாவிட்டால் உங்களுக்குத் தெரிந்த டாக்டர்களை கேட்டுப்பாருங்கள். அதிகாலையில் (நேரம் கிடைக்கும் போதெல்லாம்) தினமும் அந்த நிலத்திற்கு செல்லும் டாக்டர்கள் மண் வெட்டி எடுத்து களை வெட்டுவது, தண்ணீர் பாய்ச்சுவது போன்ற பல்வேறு விவசாய பணிகளில் ஈடுபடுவார்கள்.

சில நேரங்களில் மாடுகளைப் பராமரிப்பார்கள். (வாயைப் பிளக்க வேண்டாம் அவர்களும் சாதாரண மனிதர்கள் தான்). இன்னும் ஒரு படி உயரமாகச் சென்று பல டாக்டர்கள் தங்களது மருத்துவமனைகளிலும், மருத்துவமனைகளோடு இணைந்த கேண்டீனிலும் தங்களது தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், கீரைகளைத் தினமும் விற்கின்றனர். நாட்டுக்கோழி முட்டைகளை அழகாக பேக்கிங் செய்து பார்மஸிகளில் வைத்து விற்கின்றனர். நெல்லிக்காய் வடகம், கத்தரி வடகம் என பலவித வடகங்களும் சில பார்மஸிகளில் கிடைக்கும்.

தேனியில் செயல்படும் நாட்டு ரக பசு மாடு கறக்கும் பால் மட்டும் விற்கப்படும் பால் பண்ணைக்கு பல டாக்டர்கள் பால் சப்ளை செய்கின்றனர் என்றால் டாக்டர்களின் ஆர்வத்தைப் பாருங்களேன். இங்கு ஒரு லிட்டர் நாட்டுப் பசும்பால் 110 ரூபாய். இதன் தரமும், சுவையும் சாப்பிட்டவர்களுக்கே புரியும்.

டாக்டர்களை பொறுத்தவரை தங்கள் வீடுகளில் பிராய்லர் கோழிகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து விடுகின்றனர். தங்கள் தோட்டங்களில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை தான் தங்களது வீடுகளில் அடித்து சாப்பிடுவார்கள். அதேபோல் டாக்டர்களின் தோட்டங்களில் தங்கியிருக்கும் விவசாய பணியாளர்களுடன் மிகவும் குழந்தை தனம் கலந்த கள்ளம்கபடம் அற்ற நட்பு பாராட்டும் டாக்டர்களும் அதிகமாக உள்ளனர்.

விவசாய பணியில் ஈடுபடும் அந்த குடும்பத்திற்கு பேசிய சம்பளத்தை விட அவ்வப்போது டாக்டர்கள் தரும் சன்மானம் பல மடங்கு அதிகமாக இருக்கும். உயர்மருத்துவ சிகிச்சை கூட இவர்களுக்கு சில நொடிகளில கிடைத்து விடும். அவர்கள் தான் டாக்டர்களின் முழு அன்பை பெற்றவர்களாயிற்றே... இதனால் டாக்டர்கள் பராமரிக்கும் தோட்டத்தில் வேலைக்கு சேர்ந்தவர்கள் எக்காரணம் கொண்டும் வேலையை விட்டு விலகுவதில்லை.

இப்படி டாக்டர்கள் விவசாயம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு என தங்களை இயற்கையான வாழ்க்கை முறையோடு இணைத்துக்கொள்வதால் தங்களுக்குத் தினமும் புத்துணர்வு கிடைக்கிறது. தங்களின் உடல் நலமும், மனநலமும் மிகவும் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது. எங்களது மகிழ்ச்சியான வாழ்வியல் பயணத்திற்கு இந்த விவசாயம் கலந்த வாழ்வியல்துறை மிகவும் உதவியாக இருக்கிறது என டாக்டர்கள் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர்.

Updated On: 18 Nov 2021 4:36 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...