Begin typing your search above and press return to search.
போலி பீடி தயாரித்தவர் கைது; ரூ.2 லட்சம் மதிப்பு பீடி கட்டுகள் பறிமுதல்
கம்பத்தில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக பீடி, சிகரெட்டுகளை தயாரித்து விற்றவர் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS

கம்பத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போலி பீடி, சிகரெட்டு பண்டல்கள்.
தேனி மாவட்டம், கம்பத்தில் ஒரு பிரபல தனியார் நிறுவனங்களின் தயாரிப்பு என்ற பெயரில் போலியாக பீடி, சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது குறித்து அற்புதனந்தா என்பவர் கம்பம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் கம்பம் கே.வி.ஆர்., தெருவில் உள்ள நாகூர்கனி என்பவர் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு ஆறு மிகப்பெரிய நிறுவனங்களின் பெயரில் போலியாக பீடி, சிகரெட் தயாரித்து இருப்பு வைக்கப்பட்டிருந்தது.
சுமார் 2 லட்சம் ரூபாய் மதி்ப்பில் அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த சரக்குகளை போலீசார் கைப்பற்றினர். கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்கு பதிவு செய்து, போலி பீடி, சிகரெட் தயாரித்ததாக நாகூர்கனியை கைது செய்தார்.