/* */

கர்நாடகம்-மகாராஷ்டிரம் இடையே மோதலுக்கு காரணம் என்ன?

கடந்த ஒரு வார காலமாக கர்நாடகத்திற்கும் மகாராஷ்டிரத்திற்கும் இடையே எல்லை தொடர்பாக பனிப்போர் நடந்து வருகிறது.

HIGHLIGHTS

கர்நாடகம்-மகாராஷ்டிரம் இடையே மோதலுக்கு காரணம் என்ன?
X

பைல் படம்

1960 ஆம் ஆண்டிலிருந்து நீண்டு வரும் இந்தச் சண்டை, இப்போது உக்கிரமடைந்திருக்கிறது. இத்தனைக்கும் இரண்டு மாநிலங்களிலும், பாரதிய ஜனதா கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது. மராட்டியத்தில் உள்ள சாங்கிலி மாவட்டத்தின் ஜாட் தாலுகாவில் உள்ள, கன்னட மொழி பேசும் பஞ்சாயத்துக்களில், கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால், தங்கள் கிராமங்களை கர்நாடகத்தோடு இணைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதாக கர்நாடக முதல்வர் பொம்மை கொளுத்தி போட்டபின்னர் பிரச்னை ஆரம்பித்தது.

மராட்டிய கர்நாடக எல்லையில் அப்படி ஒரு பிரச்னையே இல்லை என்றும், கர்நாடகாவில் உள்ள பெல்காம், கார்வார், நிப்பானி போன்ற பகுதிகளையும், அதை ஒட்டிய 865 மராட்டிய மொழி பேசும் கிராமங்களையும், மராட்டியத்தோடு இணைக்க உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருவதாகவும் பதிலடி கொடுத்த அதே பாஜகவின் மராட்டிய மாநில துணை முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் கூடுதலாக இன்னொன்றையும் சொன்னார்.

அதாவது அனைத்துக் கட்சி தலைவர்களை உள்ளடக்கிய 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் எல்லை தாவா தொடர்பான பிரச்சனைகளை விரைவுபடுத்த கோரிக்கை விடுக்க போவதா கவும் அதிரடி காட்டினார். கூடுதலாக இரண்டு மூத்த அமைச்சர்கள் குழுவும் இதற்காக அமைக்கப்பட்டிருப்பதாகவும் பட்னாவிஸ் கருத்து தெரிவித்தார்.

அதற்கு பதிலடியாக மராட்டியத்தில் உள்ள கன்னட பள்ளிகளுக்கு சிறப்பு மானியம் வழங்கியதோடு, மராட்டியத்தில் உள்ள கன்னட மொழி பேசும் பகுதிகளை கர்நாடகத்தோடு இணைக்க போராடிய போராட்டக்காரர்களுக்கு பென்சன் வழங்கியும் உத்தரவிட்டார் கர்நாடக முதல்வர் பொம்மை. எல்லை பிரச்னை தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் நிலையில் சென்றும் கூட, பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தலைமை அமைதி காப்பது ஏன் என்று தெரியவில்லை.

கர்நாடக முதல்வரின் அறிக்கை மராட்டியத்தை எரிச்சல் ஊட்டும் வகையில் இருந்த நிலையில், பெல்காம், கார்வார், நிப்பானி உள்ளிட்ட கர்நாடகத்தில் உள்ள மராட்டிய மொழி பேசும் கிராமங்களில் வாழும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு, பென்ஷன் அறிவித்தார் மராட்டிய துணை முதல்வரான பட்னாவிஸ்.

கூடுதலாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு எந்த நிலையில் இருந்தாலும், பெல்காம், கார்வார், மற்றும் நிப்பானி உள்ளிட்ட 865 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு உரிமை கோருவதில் மராட்டியத்தின் நிலைப்பாடு, எந்தவித பேச்சுவார்த்தைக்கும் உட்பட்டதல்ல என்றும் கடுமை காட்டியிருக்கிறார்.

தங்கள் மாநிலத்தின் நிலங்களை காக்க, ஒரே கட்சியைச் சேர்ந்த இரண்டு அரசுகள் மோதிக் கொள்வது விந்தையாக இருந்தாலும், நிலம் எத்தனை முக்கியமானது என்பதை இதிலிருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். இதே பிரச்னை இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும் இந்த பிரச்னையை எப்படி கையாளப்போகின்றன. நீதிமன்றம் எடுக்கும் முடிவை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப் போகின்றன என்பது மில்லியன் டாலர் கேள்வி. எனவே, இந்நிகழ்வை ஒட்டுமொத்த இந்தியாவும் கவனித்து வருகிறது.

Updated On: 26 Nov 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  9. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  10. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!