/* */

உயிர்பலி வாங்க காத்திருக்கும் ஆபத்தான மின்கம்பம்...!

மின்கம்பத்தின் படத்தை சற்று உற்றுப்பாருங்கள்... உங்கள் மனதே பகீர் என்றாகி விடும்.

HIGHLIGHTS

உயிர்பலி வாங்க காத்திருக்கும் ஆபத்தான மின்கம்பம்...!
X

தேனி மாவட்டம், சீலையம்பட்டியில் நகருக்குள் செல்லும் நான்கு வழிச்சாலையின் (தற்போது இருவழிச்சாலை) ஓரத்தில் தான் அமைந்துள்ளது இந்த மின்கம்பம். தரைப்பகுதி முதல் தலைப்பகுதி வரை கான்கிரீட் முழுக்க உதிர்ந்து உள்ளே இருக்கும் கம்பிகள் எலும்புக்கூடு போல் தெரிகிறது. நீண்ட நாட்கள் ஆனதாலோ என்னவே அந்த கம்பிகளும் துருப்பிடித்து, துருவும் உதிர்ந்து வருகிறது.

இதனை மாற்ற வேண்டும் என பலநுாறு முறை மக்கள் மனுக்கொடுத்தும் மின்வாரியம் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் பெரும் அளவில் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். தற்போதைய பருவநிலை எப்படி சீர்கெட்டுக் கிடக்கிறது என்பதை அத்தனை பேரும் அறிவோம். துாத்துக்குடி, நெல்லையில் பெய்தது போல் அல்ல... அங்கு... பெய்ததில் 10 சதவீதம் மழை பெய்தாதே இந்த மின்கம்பம் சாய்ந்து விடும். மேலே செல்வது 3 பேர் லைன் என்பதால் என்ன நடக்கும் என்பதை கற்பனைகூட செய்து பார்க்கவில்லை. காரணம் இந்த மின்கம்பம் சாயும் போது கூடவே சில மின்கம்பங்களையும் இழுத்துக் கொண்டு சாய்ந்து பெரும் விபத்தை ஏற்படுத்தி விடும்.

இப்படிப்பட்ட சிறிய அளவிலான குறைபாடுகளை கூட சரி செய்ய வேண்டுமென்றால் கூட, எஸ்.பி.,யிடமோ, கலெக்டரிடமோ, அமைச்சரிடமோ, முதல்வரிடமோ முறையிட வேண்டிய நிலை தான் இந்த ஆட்சியில் காணப்படுகிறது. காரணம் அதிகாரிகளிடம் அவ்வளவு கடுமையான மெத்தனப்போக்கும், அசால்ட்டான மனநிலையும் காணப்படுகிறது. உயிர்ப்பலி ஆகும் முன் யாராவது இந்த குறைபாட்டினை சரி செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இதேபோல் எங்கெங்கு எல்லாம் மின்கம்பம் உள்ளதோ அதனையும் சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

எச்சரிக்கைக்காக

பழுதடைந்த மின்கம்பம் - கவனமாக இருக்க அறிவுறுத்தல்

பழுதடைந்த மின்கம்பம் என்பது ஒரு மிக ஆபத்தான பொருள் ஆகும். இது மின்சார கசிவு, தீ விபத்து, மின்சார அதிர்ச்சி போன்ற பல ஆபத்துகளை ஏற்படுத்தலாம். எனவே, பழுதடைந்த மின்கம்பத்தைக் கண்டால், அதை நெருங்காமல் இருக்க வேண்டும். அதற்கு பதிலாக, உடனடியாக மின்சார வாரியத்தைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பழுதடைந்த மின்கம்பத்தைக் கண்டால் பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

  • மின்கம்பத்தை நெருங்க வேண்டாம்.
  • மின்கம்பத்தைத் தொட வேண்டாம்.
  • மின்கம்பத்தின் அருகே எந்த பொருளையும் வைக்க வேண்டாம்.
  • மின்கம்பத்தின் அருகே குழந்தைகள் மற்றும் விலங்குகளை அனுமதிக்க வேண்டாம்.
  • பழுதடைந்த மின்கம்பத்தைக் கண்டால் உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:
  • மின்சார வாரியத்தைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கவும்.
  • மின்கம்பத்தின் அருகே உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும்.
  • மின்கம்பத்தின் அருகே உள்ள பொருட்களை அகற்றவும்.

பழுதடைந்த மின்கம்பத்தை நெருங்குவதைத் தவிர்ப்பதன் மூலம், உங்கள் உயிரையும், உங்கள் அருகிலுள்ளவர்களின் உயிரையும் காப்பாற்றலாம்.

பழுதடைந்த மின்கம்பத்தால் ஏற்படும் ஆபத்துகள்

  • மின்சார கசிவு: பழுதடைந்த மின்கம்பத்தில் மின்சாரம் கசிவு ஏற்படலாம். இந்த மின்சார கசிவு காரணமாக, மின்சார அதிர்ச்சி ஏற்படலாம்.
  • தீ விபத்து: பழுதடைந்த மின்கம்பம் தீப்பிடித்து எரியலாம். இந்த தீ விபத்து காரணமாக, உயிரிழப்பு மற்றும் பெரிய அளவிலான பொருள் சேதம் ஏற்படலாம்.
  • மின்சார அதிர்ச்சி: பழுதடைந்த மின்கம்பத்தைத் தொடும்போது, மின்சார அதிர்ச்சி ஏற்படலாம். இந்த மின்சார அதிர்ச்சி காரணமாக, உடல் பாதிப்பு அல்லது உயிரிழப்பு ஏற்படலாம்.

எனவே, பழுதடைந்த மின்கம்பத்தைக் கண்டால், அதை நெருங்காமல் இருப்பது மிகவும் அவசியம்.

Updated On: 27 Dec 2023 2:10 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...