/* */

தஞ்சை ஊரடங்கில் 352 வழக்குகள், 312 வாகனங்கள் பறிமுதல்

தஞ்சாவூரில் கடந்த 2 நாட்களாக முழு ஊரடங்கில் போலீசார் தடையை மீறியதாக 352 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 312 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

தஞ்சை ஊரடங்கில் 352 வழக்குகள், 312 வாகனங்கள் பறிமுதல்
X

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மே 31-ஆம் தேதி வரை தளர்களற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பால், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தவிர மீதி அனைத்து கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் தேவையின்றி சாலைகள் செல்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தேவையின்றி சாலையில் வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 352 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,

312 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தடையை மீறி செயல்பட்ட இரண்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் காவல்துறையினருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 25 May 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்