தஞ்சை பெரிய கோயிலில் கோ பூஜை; பெருநந்திக்கு சிறப்பு அலங்காரம்

மாட்டு பொங்கலை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோயிலில் கோ பூஜை நடைபெற்றது; பெருநந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தஞ்சை பெரிய கோயிலில் கோ பூஜை; பெருநந்திக்கு சிறப்பு அலங்காரம்
X

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவில்  பெருநந்திக்கு, சிறப்பு அபிஷேகம்,  500 கிலோ காய்கனிகளால் அலங்காரம் நடைபெற்றது. 

ஆண்டுந்தோறும் மாட்டுப் பொங்கல் அன்று, உலக புகழ் பெற்ற பெரிய கோயிலில், 108 பசுக்களுக்கு கோ பூஜை நடைபெறும். மேலும் பெருவுடையாருக்கு ஏற்ற பெருந்திக்கு, ஆயிரம் கிலோ காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

பெரியகோவிலில், கொரோனா தடை உத்தரவு காரணமாக 108 கோ பூஜைக்கு பதில், ஒரே ஒரு பசு கன்றுக்கு பக்தர்கள் இன்றி கோபூஜை நடைபெற்றது.

இந்தாண்டு கொரோனா தடை உத்தரவு காரணமாக, பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் கோபூஜை நடைபெற்றது. ஒரேஒரு பசு கன்றுக்கு, சந்தனம், குங்குமம் வைத்து, புத்தாடை அணிவித்து, தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் பசுவிற்கும் - கன்றுக்கும் சக்கரை பொங்கல், பழங்கள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து, பெருநந்திக்கு சுமார் 500 கிலோ எடையுடைய காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் யாரும் இன்றி கோயில் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Updated On: 15 Jan 2022 4:45 AM GMT

Related News

Latest News

 1. சினிமா
  ஹீரோவாக ஆசைப்பட்ட அனிருத்: அட்வைஸ் சொன்ன ரஜினி
 2. சினிமா
  துல்கர் சல்மானுடன் நடிக்கவில்லையே.. நடிகை பூஜா ஹெக்டே புலம்பல்
 3. ஆன்மீகம்
  குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடுமாம்...!
 4. சினிமா
  இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தம்பதி போட்டோ வைரல்
 5. தமிழ்நாடு
  சர்வதேச காற்றாடி திருவிழா மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது
 6. தமிழ்நாடு
  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்
 7. ஈரோடு
  கோபிசெட்டிபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
 8. ஈரோடு
  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,300 கன அடியாக சரிவு
 9. தர்மபுரி
  இல்லம்தோறும் மூவர்ணக் கொடி: ஏர்ரப்பட்டியில் மாணவிகளின் விழிப்புணர்வு...
 10. வழிகாட்டி
  நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு