/* */

தஞ்சையில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்த கும்பல் கைது

கர்நாடக மாநில வனப்பகுதியில் பதுங்கி இருந்தபோது கொள்ளை கும்பலை தஞ்சாவூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

தஞ்சையில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்த கும்பல்  கைது
X

வனப்பகுதியில் பதுங்கி இருந்த  கொள்ளையர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்

தஞ்சை மாவட்டத்தில் பூட்டி இருந்த வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வந்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி ரவளிப்பிரியா தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட போலீசார் கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளைக் கும்பலை தேடி வந்தனர்.

தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் முக்கிய குற்றவாளியான தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரத்தைச் சேர்ந்த கொடுங்க சாமி என்பவரை கர்நாடக மாநிலம் மைசூர் அருகே ஒரு வனப்பகுதியில் பதுங்கி இருந்தபோது தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேலும் அவனுடன் பதுங்கியிருந்த கூட்டாளி பெங்களூரை சேர்ந்த மோகன்குமார் என்பவரையும் மடக்கிப் பிடித்தனர். மேலும் இவர்களுக்கு கொள்ளையடிக்க உதவிய தஞ்சை மாவட்டம் நெடாரை சேர்ந்த தியாகராஜன் என்ற சொட்டை தியாகராஜன் மற்றும் திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோரையும் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில், தஞ்சையில் தங்கியிருந்து இவர்கள் தஞ்சை வல்லம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பூட்டியிருந்த 15-க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதில் முக்கிய குற்றவாளியான கொடுங்க சாமி மீது கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட கொள்ளை மற்றும் திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளது. இவனுக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு முழுவதும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ 5 லட்சம் ரொக்கம் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் தனிப்படை போலீசார் தஞ்சை மருத்துவகல்லூரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Feb 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  3. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  4. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  6. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  7. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  8. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!