/* */

அபராதம் கட்ட வசதி இல்லை சார்... டி.எஸ்.பியிடம் கண்ணீருடன் கெஞ்சிய பெண்!

ரூ.5000 அபராதம் என்னால் கட்ட முடியாது. அந்த அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை என்று பெண் ஒருவர் டி.எஸ்.பி.யிடம் கண்ணீருடன் புலம்பினார்.

HIGHLIGHTS

அபராதம் கட்ட வசதி இல்லை சார்... டி.எஸ்.பியிடம் கண்ணீருடன் கெஞ்சிய பெண்!
X

விதிகளை மீறியதால் அபராதம் விதிக்கப்பட்ட பேக்கரி.

கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தேவை இன்றி வெளியே செல்ல கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்தகம், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் எந்நேரமும் செயல்படலாம் என்றும், உணவகங்கள், பேக்கரிகள் குறிப்பிட்ட நேரங்களில் பார்சல் மட்டும் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேக்கரி மதியம் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட முன்னதாகவே தஞ்சை கீழவாசல் பகுதியில் பேக்கரி கடை திறந்து இருப்பதை கண்ட டிஎஸ்பி பாரதிராஜா கடைக்கு சீல் வைத்து 5,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

அப்போது கடையில் இருந்த பெண் தங்களால் 5,000 ரூபாய் கட்ட முடியாது . ஏற்கனவே வியாபாரம் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து இருப்பதாகவும் எனவே இனிமேல் கடையை திறக்க மாட்டோம் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கெஞ்சினார். ஆனால் டி.எஸ்.பி., நேற்றும் நான் எச்சரிக்கை செய்தேன் ஆனால் அதை மதிக்காமல் இன்றும் கடை திறந்திருப்பதால் அபராதம் விதிப்பதாக கூறினார். இதேபோல் பல்வேறு பகுதிகளில் திறந்திருந்த எலக்ட்ரானிக் மற்றும் எலட்டிர்கல் என 5 கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகமும், காவல் துறையினரும் கடைகளுக்கு தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்து சீல் வைத்தனர்.


#instanews #tamilnadu #facility # pay #fines #Woman #DSP #tears #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #பெண் # Penalty #அபராதம் #lockdown #stayhome #staysafe


Updated On: 13 May 2021 10:55 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!