/* */

தஞ்சாவூர் பெரியகோவில் உண்டியல்களில் ரூ.10.88 லட்சம் காணிக்கை

தஞ்சை பெரியகோவிலில், பக்தர்கள் மூலம் காணிக்கையாக பத்து லட்சத்து, 88 ஆயிரத்து, 650 ரூபாய் வசூலாகி உள்ளது.

HIGHLIGHTS

தஞ்சாவூர் பெரியகோவில் உண்டியல்களில் ரூ.10.88 லட்சம் காணிக்கை
X

தஞ்சை பெரியகோவில்


பிரதிபெற்ற தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி, வராஹி, விநாயகர், முருகன், கருவூரார் சன்னதி உள்பட 11 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், பக்தர்கள் பணம், நகை உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியல்கள் மாதம் ஒருமுறை குறிப்பிட்ட தினத்தில் திறந்து எண்ணப்படுகிறது.

அதன்படி, 11 உண்டியல்களும் இன்ரு திறந்து, காணிக்கை பணம் எண்ணும் பணியில் அலுவலர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுயயுதவிக்குழுவினர் ஈடுபட்டனர். இப்பணியை ஹிந்து அறநிலையத்துறை தஞ்சை உதவி கமிஷனர் கிருஷ்ணன் தலைமையில், செயல் அலுவலர் மாதவன் உள்பட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

உண்டியல் எண்ணிக்கை முடிவில், 11 உண்டியல் மூலம், பத்து லட்சத்து, 88 ஆயிரத்து, 650 ரூபாய் காணிக்கை பணம் வசூலாகியிருந்தது. கொரோனா காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையின்றி, வெளிநாட்டு கரன்சிகளும், தங்கம், வெள்ளி நகைகள் ஏதும் இம்முறை காணப்படவில்லை என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 17 Sep 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...