/* */

குழந்தை திருமணம்: சிறுமியை மீட்டு காவல்துறையினர் விசாரணை

தஞ்சை அருகே குழந்தை திருமணம் தொடர்பாக, சிறுமியை மீட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

குழந்தை திருமணம்: சிறுமியை மீட்டு காவல்துறையினர் விசாரணை
X

தஞ்சையை சேர்ந்தவர் குணசேகரன். அவர் மீது தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இவரது மகளுக்கு 15 வயது, இந்த சிறுமிக்கு அவரது உறவினர் மகனுடன் கடந்த 16ஆம் தேதி திருமணம் நடந்தது உள்ளது.

இந்நிலையில், அந்த சிறுமி சைல்ட் லைன் அமைப்பிற்கு கால் செய்து தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார். இதை அடுத்து சைல்ட் லைன் அமைப்பினர் சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிக்கு திருமணம் நடந்தது உண்மை என தெரிய வந்தது.

இதை அடுத்து, சைல்ட் லைன் அமைப்பினர் சிறுமியை மீட்க முயற்சி செய்துள்ளனர். இதற்கு அந்த சிறுமியின் தந்தை குணசேகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து சைல்ட் லைன் அமைப்பினர் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததை அடுத்து வல்லம் டிஎஸ்பி பிருந்தா மற்றும் தமிழ் பல்கலைக்கழக உதவி ஆய்வாளர் அபிராமி மற்றும் காவல்துறையினர் நேரடியாக நாஞ்சிக்கோட்டை சென்று சிறுமியை மீட்டு சைல்டு லைன் அமைப்பினரிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையில், சிறுமியின் தந்தை குணசேகரன் தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சிறுமியின் தாய் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Updated On: 21 March 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...