/* */

640 குக்கர்கள் சோதனையில் பறிமுதல்

640 குக்கர்கள் சோதனையில்  பறிமுதல்
X

தஞ்சாவூரில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாலை திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், புதுக்குடி சோதனைச் சாவடியில் வணிகவரி துறை அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு கூரியர் பார்சல்களை கொண்டு வரும் லாரி சந்தேகத்திற்கிடமாக வந்ததை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட 640 குக்கர்கள் இருந்தது .

இது தொடர்பாக ஆவணங்களை ஆய்வு செய்த போது திருச்சியிலிருந்து திருவையாறுக்கு ஒரு பேக்கரி கடைக்கு கொண்டு செல்வதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பேக்கரி கடைக்கு ஏன் இவ்வளவு குக்கர்கள் கொண்டு செல்லப்படுகிறது என்ற கேள்விக்கு வாகனங்களில் வந்தவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை.

இதை அடுத்து லாரியையும், குக்கர்களையும் பறிமுதல் செய்து தஞ்சாவூர் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான தஞ்சாவூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த குக்கர் 2 லட்சத்தி 68 ஆயிரம் மதிப்புடையது. ஏற்கனவே திருவையாறுக்கு 2 கண்டெய்னர்களில் கொண்டு வரப்பட்ட குக்கர்கள் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 19 March 2021 2:32 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!