/* */

கல்லணை கால்வாயில் ரூ.2639.15 கோடியில் புனரமைப்பு திட்ட பணிகள் தீவிரம்

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் கல்லணை கால்வாயில் ரூ.2639.15 கோடியில் புனரமைப்பு திட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

HIGHLIGHTS

கல்லணை கால்வாயில் ரூ.2639.15 கோடியில் புனரமைப்பு திட்ட பணிகள் தீவிரம்
X

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து கல்லணை கால்வாய் என்ற பெயரில், ஆங்கிலேயார்கள் ஆட்சி காலத்தில் 1928-ம் ஆண்டு, வானம் பார்த்த பூமியாக காணப்பட்ட பூதலூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பகுதியின் மூலம் பாசன வசதியை உருவாக்க, 148 கி.மீ. தூரத்துக்கு முதன்மை வழிதடத்ததையும்,

636 கி.மீ.தூரத்துக்கு கிளை வாய்க்கால்களையும் வெட்டினர். அத்துடன் 694 நீர்பிடிப்பு ஏரிகள் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 2.27 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

கல்லணை கால்வாயில் இருந்து பாசனத்துக்காக ஆரம்பத்தில், வினாடிக்கு 4,200 கன.அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு கரைகள் பலவீனமானதால் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தாலே கரைகளில் உடைப்பு ஏற்படுவது வழக்கமாகிவிடுகிறது. இதனால் கடைமடைக்கு ஆண்டுதோறும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதையடுத்து விவசாயிகள் பல ஆண்டுகளாக கல்லணை கால்வாயை முறையாக புனரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில், கல்லணை கால்வாயை 16 தொகுப்புகளாக புனரமைப்பு செய்ய, ரூ.2639.15 கோடி ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்த தமிழக அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் பணியை கடந்த பிப்.14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் துவக்கி வைத்தார்.

இதை தொடர்ந்து பணிகள் துவங்கப்பட்ட கல்லணை கால்வாயில் சிமென்ட் தளம் அமைப்பது, கரையை பலப்படுத்தல் போன்ற பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கல்லணைக் கால்வாய் உதவி செயற்பொறியாளர் சண்முகவேல் கூறுகையில் 16 தொகுப்புகளாக பணிகள் பிரிக்கப்பட்டு, ரூ.2639.15 கோடியில் 100 கி.மீ தூரத்துக்கு கல்லணை கால்வாய் கான்கீர்ட் லைனிங் அமைக்கும் பணி,

1,339 மதகுகள் திரும்ப கட்டும் பணி, 21 கால்வாய் நீர்வழி பாலம் திரும்ப கட்டு பணி, 12 கால்வாய் நீர் வழி பாலம் சீரமைக்கும் பணி, 24 நீரொழுங்கிகள் திரும்ப கட்டும் பணி, ஒரு நீரொழுங்கி புதியதாக கட்டும் பணி,

20 பாலங்கள் புதியதாகவும், 10 பாலங்கள் சீரமைக்கும் பணி, 308 ஏரிகள் புனரமைக்கும் பணி என நடைபெற உள்ளது. இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் பாசன வசதி எந்த தடையும் இன்றி பெற முடியும்.

இத்திட்ட பணகள் மூன்று ஆண்டுகளில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடைமடைக்கு தண்ணீர் செல்ல இரு வார காலம் பிடிக்கும்,

இப்பணிகள் நிறைவு பெற்றதும், ஒரு வார காலத்தில் கடைமடைக்கு தண்ணீர் செல்லும். தண்ணீர் பூமிக்குள் இறங்கும் வகையில் ஆங்காங்கே கசிவு நீர் குழிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Updated On: 22 April 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  2. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  3. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  4. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  5. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  6. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  8. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  9. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்