/* */

தஞ்சையில் கொள்முதல் குறித்து விவசாயிகளுடன் கலந்தாலோசனை

நெல் கொள்முதல் குறித்து விவசாயிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தஞ்சையில் கொள்முதல் குறித்து  விவசாயிகளுடன்  கலந்தாலோசனை
X

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நிகழாண்டுக்கான குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் இருந்து " நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்" மூலமாக நெல் கொள்முதல் குறித்த விவசாயிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக நிகழாண்டில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர், தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று கொள்முதல் குறித்த கருத்துக்களை முன்வைத்தனர்.. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் , தமிழ்நாடு முதலமைச்சரின் விருப்பத்தின்படி டெல்டா மாவட்டங்களில் மகசூல் அதிகமாக பெற வேண்டும் என்ற நோக்கத்தில், தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது, மாவட்டத்தில் 42 ஆயிரம் ஹெக்டேர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 28 ஆயிரம் ஹெக்டேர் நடவுப்பணிகள் நடைபெற்றுள்ளன, 60 ஆயிரம் ஆயிரம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயித்து தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 226 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 7லட்சத்து 80ஆயிரம் மெட்ரிக் டன். நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.. நாளொன்றுக்கு 5000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விவசாயிக்கு எந்த பிரச்சனையுமின்றி முறையாக கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 24 Jun 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  4. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  7. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  8. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  9. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  10. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...