/* */

கும்பகோணம் திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது

கும்பகோணம் திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில் தேரோட்டம் மிக சிறப்பாக நடந்தது.

HIGHLIGHTS

கும்பகோணம் திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது
X

கும்பகோணம் திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறையில் பிரசித்தி பெற்ற சாரநாத பெருமாள் கோவில் உள்ளது.

பல்வேறு சிறப்பு வாய்ந்த சாரநாத பெருமாள் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி உபயநாச்சியார்களுடன் சாரநாதபெருமாள் இந்திர விமானம், சூர்யபிரபை, சேஷ வாகனம், கருடன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் கோவில் பிரகார புறப்பாடு நடந்தது.

தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதேவி, மகாலட்சுமி ஆகியோருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் சாரநாதபெருமாள் தேரில் எழுந்தருளினார். தேரோட்டத்தை அரசின் தலைமை கொறடா கோவிசெழியன், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் ஆகியோர் இணைந்து வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது.

Updated On: 20 Jan 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  2. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  3. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  5. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  6. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  7. நாமக்கல்
    மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
  8. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
  9. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்