/* */

குருத்து பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் உதவி இயக்குனர் விளக்கம்

குருத்து பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் விளக்கமளித்துள்ளார்.

HIGHLIGHTS

குருத்து பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் உதவி இயக்குனர் விளக்கம்
X

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் நடைபாண்டில் சம்பா பருவத்தில் இதுவரை 1500 எக்டர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு வளர்ச்சி பருவத்தில் உள்ளது. இந்த பருவத்தில் பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட்ட உடனே கண்காணித்து உடனடியாக பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.

தற்போது மதுக்கூர் வட்டாரத்தில் சாவித்திரி சப் ஒன் மற்றும் ஏடீடி51 சாகுபடி செய்துள்ள நெல் வயல்களில் தற்போது குருத்துப் பூச்சியின் தாக்குதல் வளர்ச்சி பருவத்தில் தென்படுகிறது.

பாதிக்கப்பட்ட பயிர்களில் இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டை கூட்டம் காணப்படும் முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள், வாயிலிருந்து வரும் இழைகள் மூலம் நேரடியாக குருத்துப் பகுதிக்குள் நுழைந்து தண்டில் வளரும் குருத்தை உட்கொள்வதால் குருத்து காய்ந்து விடும். எனவே சரியான நேரத்தில் இதனை கட்டுப்படுத்தாவிட்டால் அதிக வெண்கதிர்களை உருவாக்கும் குருத்தை பிடித்து இழுக்கும்போது கையோடு வந்துவிடும்.


மஞ்சள் நிற அந்து பூச்சிகள் வயலில் காணப்படும். இலைகளின் நுனியை கிள்ளி விடுவதால் குருத்து பூச்சிகளின் முட்டை குவியல் அழிக்கப்படுகிறது. வேப்பங்கொட்டை சாறு தெளிப்பதன் மூலம் குருத்துப் பூச்சியினை கட்டுப்படுத்தலாம்.

அசாடிராட்டின் 0.03% சத மருந்தினை இரண்டரை ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம். பூச்சியின் தாக்குதல் அதிகம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக குளோரோ டிரோனிலிபுருள்18.5எஸ்சி எக்டர்க்கு 50 மில்லி அல்லது ப்ளூ பென்டமைடு 20% குருணை எட்டருக்கு 125 கிராம் ஆகிய ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லு மருந்தை தெளித்து குருத்து பூச்சியினை கட்டுப்படுத்தலாம்.

ஏக்கருக்கு தேவையான மருந்தினை 20 லிட்டர் நீரில் கலந்து கொண்டு ஒரு லிட்டர் மருந்து கரைசலை 9 லிட்டர் நீருடன் கலந்து மாவுக்கு ஏழு டேங்க் ஏக்கருக்கு 21 டேங்க் மிகாமல் அடிக்க வேண்டும். தற்போது புதிய தலைமுறை பூச்சிக்கொல்லி மருந்துகள் நீண்ட கால கட்டுப்பாட்டுடன் பயிர் மேம்பாட்டு நன்மைகளுடன் கிடைக்கிறது. சயன்ட்ரோனிலிப்ரோல்16.9% லுபெனுரான்16.9எஸ்சி

கடந்த பூச்சிக்கொல்லி மருந்து மினிக்டோ எக்ஸ்ட்ரா என்ற பெயரில் தற்போது பயன்பாட்டில் உள்ளது இது நெற்பயிரை நீண்ட காலம் பாதுகாத்து சேதத்தை உடனடியாக நிறுத்துகிறது. குருத்துப் பூச்சியின் முட்டை முதல் அனைத்து வளர்ச்சி பருவத்தையும் வலுவாக கட்டுப்படுத்துகிறது மழை பொழிந்தாலும் நீண்ட நாட்களுக்கு பயிரை பாதுகாக்க கூடிய தன்மை உடையது. இந்த மருந்தினை ஏக்கருக்கு 20 மில்லி 30 முதல் 45 நாள் வயதுடைய நெல்லின் வளர்ச்சி பருவத்தில் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து உடனடியாக கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்துள்ளார்.

Updated On: 15 Oct 2023 7:20 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  3. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  4. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  5. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  6. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  8. ஈரோடு
    ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி...
  9. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  10. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு