/* */

குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்:சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தொடர் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தார்கள்.

HIGHLIGHTS

குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்:சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
X

குற்றால மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் காட்சி.

வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா-வட தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையம், கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் என மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை மாலை நல்ல மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்ததால் குற்றால அருவிகளில் திடீரென சனிக்கிழமை இரவு தண்ணீர் வரத்து அதிகரித்தது. தொடர்ந்து குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் குளிக்க அனுமதி இல்லாத செண்பகாதேவி அருவி, தேன் அருவி என்று அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக கொட்டுகிறது.

விடுமுறை தினம் என்றாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதனால் எந்த நெரிசலும் இல்லாமல் சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மாலை நேரங்களில் பெய்யும் மழையால் நடைபாதை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர். மழைகாரணமாக பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. இதனால் வியாபாரம் மந்தமாக உள்ளது.

இந்நிலையில் தென்காசி மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழை அளவு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (16-10-2022) விவரம் வருமாறு:-

கடனாநதி அணை : உச்சநீர்மட்டம் : 85 அடி, நீர் இருப்பு : 60.௧௦ அடி, நீர் வரத்து : 17 கன அடி, வெளியேற்றம் : 50 கன அடி. ராமா நதி அணை : உச்ச நீர்மட்டம் : 84 அடி,நீர் இருப்பு : 65 அடி,நீர்வரத்து : 14.49 கன அடி,வெளியேற்றம் : 30 கன அடி,

கருப்பா நதி அணை : உச்சநீர்மட்டம்: 72 அடி,நீர் இருப்பு : 57.42 அடி,நீர் வரத்து : 5 கன அடி,வெளியேற்றம் : 25 கன அடி. குண்டாறு அணை: உச்சநீர்மட்டம்: 36.10 அடி,நீர் இருப்பு: 34.37 அடி,நீர் வரத்து: 2 கன அடி,வெளியேற்றம்: 3 கன அடி. அடவிநயினார் அணை: உச்ச நீர்மட்டம்: 132 அடி,நீர் இருப்பு: 103அடி,நீர் வரத்து : 10 கன அடி,நீர் வெளியேற்றம்: 60 கன அடி.

மழை அளவு விவரம்: ராமா நதி :3 மி.மீ,கருப்பா நதி :13.5 மி.மீ,குண்டாறு :2 மி.மீ,ஆய்குடி :14 மி.மீ,செங்கோட்டை:2.2 மி.மீ,தென்காசி :38 மி.மீ,சங்கரன்கோவில்:,1 மி.மீ,சிவகிரி :12 மி.மீ.

Updated On: 17 Oct 2022 5:28 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?