/* */

தூத்துக்குடி ரவுடி என்கவுண்டர்: போலீசாருக்கு ஜெகதீஸ் குடும்பத்தினர் பாராட்டு

தென்காசி அருகே ஜெகதீஸ் என்ற வாலிபரை கொலை செய்த ரவுடியை என்கவுண்டர் செய்த பாேலீசாருக்கு ஜெகதீஸ் குடும்பத்தினர் நன்றி.

HIGHLIGHTS

தூத்துக்குடி ரவுடி என்கவுண்டர்: போலீசாருக்கு ஜெகதீஸ் குடும்பத்தினர் பாராட்டு
X

தூத்துக்குடி ரவுடியை என்கவுண்டர் செய்த காவல் துறையினருக்கு ஜெகதீஸ் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

தென்காசி அருகே ஜெகதீஸ் என்ற வாலிபரை கொலை செய்த தூத்துக்குடி ரவுடியை என்கவுண்டர் செய்த காவல் துறையினருக்கு ஜெகதீஸ் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.தொடர்புடைய குற்றவாளிகளையும் தண்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஜெகதீஸ் (வயது 24) இவர் அப்பகுதியில் உள்ள மலர் சந்தையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சிவகாமிபுரம் பெரியம்மன் கோவில் திருவிழா கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 6 -ஆம் தேதி வரை நடைபெற்றது. கோவில் திருவிழாவிற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் உறவினரான தூத்துக்குடியை சேர்ந்த துரைமுருகன் என்பவர் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அப்போது ஜெகதீஷ், துரைமுருகன் மற்றும் சிலரோடு மது அருந்தியதாகவும், அப்போது அங்கு சென்ற ஜெகதீஸிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த துரைமுருகன் ஜெகதீசை காரில் தூக்கி சென்று கொலை செய்து புதைத்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோவிலுக்கு சென்ற ஜெகதீசை காணாமல் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் திரண்டு பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இரண்டு நாட்கள் கழித்து ஜெகதீஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது. கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். துரைமுருகன் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவர் என்று தெரிய வந்ததால் காவல்துறையினர் தூத்துக்குடிக்கு சென்று கொலையாளி துரைமுருகனை பிடிக்க முயன்றபோது என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு சிவகாமிபுரம் மக்கள் காவல்துறைக்கு நன்றி தெரிவித்ததோடு இந்த கொலையில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளையும் தேடி தண்டிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஒரே வாரத்தில் கொலையாளிகளை கண்டு பிடித்த காவல்துறையினரை ஜெகதீசனின் உறவினர்கள் மற்றும் சிவகாமிபுரத்தை சேர்ந்தவர்கள் பாராட்டினர்.

Updated On: 19 Oct 2021 6:41 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...