/* */

தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார்

Tenkasi Constituency DMK Candidate தென்காசி லோக்சபா தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர். ராணிஸ்ரீகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

தென்காசி நாடாளுமன்ற   திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார்
X

தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார்.

Tenkasi Constituency DMK Candidate

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர்,வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம்,ஸ்ரீவில்லிபுத்தூர் என மூன்று பொதுத் தொகுதியும்,மூன்று தனி தொகுதியும் உள்ளடக்கியது.

இந்தத் தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,42, 158 பேர். பெண் வாக்காளர்கள் 7,73,822 பேர். மூன்றாம் பாலினத்தவர் 203 பேர். இந்தத் தொகுதியில் ஆண்களை விட பெண்கள் 31,664 அதிகம் உள்ளனர்.

கடந்த தேர்தலில் இங்கு திமுக சார்பில் போட்டியிட்ட தனுஷ் குமார் 4 லட்சத்து 76 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமி 3 லட்சத்து 55 ஆயிரத்து 870 வாக்குகள் பெற்று தனுஷ் குமாரிடம் தோல்வி அடைந்தார்.

தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றி வரும் அதே பகுதியைச் சேர்ந்த ராணி ஸ்ரீகுமார் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருடைய சுய விபரக் குறிப்பு:-

Dr.ராணி ஸ்ரீகுமார்

MBBS,MD(40/F)

மயக்கவியல் மருத்துவர், அரசு மருத்துவமனை சங்கரன்கோவில்.

கணவர் பெயர்:

G.ஸ்ரீகுமார் B.A, 45 /M அரசு ஒப்பந்ததாரர்,

திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ,

ஒரு பெண் குழந்தை

பெயர்: S.ஸ்ரீநிதி 14/F

10th std

முகவரி:

ஸ்ரீநிதி பவனம், கோமதி சங்கர் காலனி,

என்ஜிஓ காலனி, சங்கரன்கோவில்.

இதேபோல் அதிமுக சார்பில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாஜக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தமிழக முன்னேற்ற கழகம் சார்பில் ஜான் பாண்டியன் மகள் மருத்துவர் ஒருவர் களம் இறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு ஜான் பாண்டியன் கட்சிக்கு கொடுக்கும்போது மும்முனைப் போட்டி ஏற்படும். அதிலும் குறிப்பாக மூன்று வேட்பாளர்களும் மருத்துவர்கள் ஆவார்கள்.

Updated On: 20 March 2024 8:43 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  3. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  5. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  7. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  8. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்