/* */

சுரண்டை அருகே மின் மயானம் அமைக்க எதிர்ப்பு

சுரண்டை அருகே மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சுரண்டை அருகே  மின் மயானம் அமைக்க எதிர்ப்பு
X

மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பகுதியினர்.

தென்காசி மாவட்டம், சுரண்டை பேரூராட்சியாக இருந்து தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு அதிகமான விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலே பிரதான தொழிலாக உள்ளது. சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட பங்களாச்சுரண்டை யில் பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது . அதன் அருகே நகராட்சி சார்பில் மின் மயானம் அமைக்க மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் இப்பகுதி பள்ளியில் பயிலும் 3500 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் அருகில் உள்ள ஜெயேந்திர மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். என்பதுடன் தோப்பு மற்றும் வயல்களில் வேலை பார்க்க செல்பவர்கள் அந்த வழியில் வரும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறி திடீர் என கொளுத்தும் வெயிலில் மறியல் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் சுமார் 500ற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து சிறு குழந்தைகள் கலந்து கொண்டு மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்

தொடர்ந்து சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார், வருவாய் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நகராட்சி சேர்மன் பங்களாச்சுரண்டை பகுதியில் மின் மயானம் அமைக்கப்படாது என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 19 Feb 2023 9:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  3. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  4. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  5. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
  6. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி
  7. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  8. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  9. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  10. வானிலை
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில...