/* */

குற்றாலம் கோவிலில் முறைகேடு; சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

Courtallam Temple -குற்றாலத்தில், கடைகளை ஏலம் விடுவது உட்பட, பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

HIGHLIGHTS

குற்றாலம் கோவிலில் முறைகேடு; சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
X

குற்றாலம் கோவில் முகப்பு தோற்றம்.

Courtallam Temple -தென்காசி மாவட்டம், குற்றாலம் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்று. இங்கு ஐந்தருவி, குற்றால பிரதான அருவி, சிற்றருவி, பழைய குற்றாலம், குளிக்க அனுமதி இல்லாத வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள செண்பகாதேவி மற்றும் தேனருவி ஆகிய அருவிகள் உள்ளன. ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதேபோல், ஐயப்ப சீசன் காலங்களில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், இங்குள்ள அருவிகளில் நீராடி விட்டு குற்றாலநாதரை தரிசித்து விட்டு செல்வது வழக்கம்.

ஆன்மீக சுற்றுலா பயணிகளுக்காக, இங்கு கடைகள் மற்றும் விடுதிகள் அதிகமாக உள்ளன இவற்றை குற்றாலம் கோவில் நிர்வாகம் சார்பில் இரண்டு முறை ஏலம் விடப்படும். அவ்வாறு ஏலம் விடப்படும் கடைகளில், முறைகேடு நடந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போது, ஐயப்ப சீசன் காலம் நெருங்குகிறது இதைமுன்னிட்டு குற்றால நாத திருக்கோவிலில் சார்பாக, தரை வாடகை இடம் விடப்படும். தரையை மட்டும் ஆண்டுக்கு இரண்டு முறை வாடகைக்கு விட்டு, பல கோடி ரூபாய் வருமான வரக்கூடிய ஒரு திருக்கோவில், தென்காசி மாவட்டம் குற்றாலநாதர் திருக்கோவில் மட்டுமே. இப்படி புகழ் வாய்ந்த திருக்கோவில் இன்று, அடிப்படை வசதிகள் இல்லாமல் காட்சியளிக்கிறது.

இம்மாதம் 2ம் தேதியன்று, குற்றாலநாதர் திருக்கோவில் சார்பில், ராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இரண்டாவது ஏலம் அறிவிப்பு செய்யப்பட்டது

முதல் ஏலம் வசூல் தொகையை, மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆகியுள்ளது.. இரண்டாவது ஏலத்தில் 38 கடை ஏலம் சென்று இருக்கிறது. இதில் சென்ற ஆண்டு விட்ட தொகையை விட, 60 லட்சம் குறைவாக விடபட்டு, அரசின் வருவாயை அதிகாரிகள் இழப்பீடு செய்ததாக கூறபடுகிறது. இரவு 7 மணிக்கு மேல் ஏலம் நடந்தது. ஏலம் எடுத்தவர்களுக்கு ஒரு தொகை, திருக்கோவிலுக்கு கட்டப்பட்டு ஏலம் விரைவில் முடிக்கப்பட்டது. ஏலம் முடிக்கப்பட்டு மூன்று நாள் கழித்து, ஏலம் எடுத்தவர்களை நைசாக பேசி அழைத்து, 'நீங்கள் ஒவ்வொரு கடைக்கும், குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டும்,' என கண்டிப்பாக நிர்வாக அதிகாரி கேட்டுள்ளார்.

சென்ற ஆண்டு வாடகைக்கு விடப்பட்ட தரை வாடகை, இந்த ஆண்டு ஏலம் செல்லும் போது 10 சதவீதம் உயர்வாகத்தான் ஏலம் விடப்படும். இது நடைமுறையில் ஒன்று. ஆனால் தற்போது, திடீரென்று இரவு 7 மணிக்கு மேல் விடப்பட்ட ஏலத்தின் மர்மம் புரியவில்லை. இதற்கு முன் சபரிமலை சீசனுக்கு மட்டும், கார் பார்க்கிங் 40 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்படும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் சீசன் காலங்களுக்கு ஒரு ஏலம் கார் பார்க்கிங் விடப்படும். அந்தத் தொகை 35 லட்ச ரூபாய்க்கு இருக்கும். வருடத்திற்கு 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும்.

குற்றாலநாதர் தேவஸ்தான கார் பார்க்கிங், தற்போது 38 லட்ச ரூபாய்க்கு மட்டும் வருடத்திற்கு சென்றிருக்கிறது இதில் மர்மம் உள்ளது. பெருமளவில், ஊழல் நடந்துள்ளது என விபரம் அறிந்த சிலர் கூறுகின்றனர்.

திருக்கோவிலில் பணிபுரியும் நிர்வாக அதிகாரி, பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகிறார் என்பது நிதர்சன உண்மையாக இருக்கிறது. ஒரு கடைக்கு பெயர் மாற்றி வருபவருக்கு, பெயர் மாற்றி கொடுப்பதற்கு நிறை தொகை கை மாறி இருக்கிறது எனவும் குற்றச்சாட்டு உள்ளது.

கோவில் சார்பாக எடுக்கப்பட்ட கடையை, மாற்று சமூகத்திற்கு பல லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு கடையை நடத்துவதற்கு அனுமதி அளிக்கிறது இத்திருக்கோவில் நிர்வாகம். திருக்கோவில் நடைபாதை படிக்கட்டுகள் ஏலம் போகும் விந்தையும் இங்கு நடக்கிறது. குற்றாலத்தில் மட்டும், படிக்கட்டு கடை ஏலத்திற்கு போகும் ஒரு படிக்கட்டு இரண்டு லட்சம் முதல் 3 லட்சம் வரை ஏலம் செல்கிறதுஇப்படி எதற்கெடுத்தாலும் வருவாய் கொட்டித் தரும் கோவிலுக்கு, அடிப்படை வசதிகளை செய்யவில்லை.

குற்றாலம் கோவிலுக்கு வரும் வருமானத்திற்கு பஞ்சமில்லை; ஆனால், இங்கே குடிப்பதற்கு குடிநீர் பஞ்சம், கழிப்பிட வசதி பஞ்சம், பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நடைபாதை எல்லாம் ஆக்கிரமிப்பு, அடிப்படை வசதிகள் இல்லை. பெண்கள் கழிப்பிட வசதி இல்லை, வேலையாட்கள் பற்றாக்குறை, தூய்மைப்படுத்துவதில் குறைபாடுகள் இந்து சமய அகம விதிப்படி 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேக பணி மேற்கொள்ள வேண்டும் 14 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்றும் கும்பாபிஷேகம் செய்வதற்கு எந்தவித அறிகுறியும் இதுவரை இல்லை.

திருக்கோவிலுக்கு சொந்தமான கட்டளை சொத்துக்கள் ஏராளம். தற்போது குற்றாலம் சுற்றுலாத்தலமாக பிரபலமாக உள்ளது. தென்காசி மாவட்டமாக அங்கீகாரம் பெற்றுள்ளதால், குற்றாலநாதர் சொந்தமான கட்டளை சொத்துக்கள் எல்லாம், தற்போது பல லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கு முறையாக விசாரணை செய்வதற்கு என்று சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்தால் பல்வேறு குற்றச்சாட்டுகளும் பல்வேறு உண்மைகளும் திடுக்கிடும் தகவல்களும் வெளிவரும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Nov 2022 11:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  2. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  3. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  4. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  5. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  7. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  8. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  10. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?