/* */

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்: பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் அனுஷ்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்: பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் அனுஷ்டிப்பு
X

ராஜீவ் காந்தியின் 31-வது ஆண்டு நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு கட்சியினர் அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் காசி விசுவநாதர் கோயில் அருகே உள்ள காந்தி சிலையின் முன்பு ராஜீவ் காந்தி திருவுருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இதனைத்தொடர்ந்து அவரது தலைமையில் காங்கிரஸ் நகர தலைவர் காதர் மைதீன், நகர்மன்ற உறுப்பினர்கள் ரபிக், சுப்பிரமணியன், பூமாதேவி, உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் வன்முறை தீவிர ஒழிப்பு பிரச்சனை உறுதிமொழியும் ஏற்றனர்.

Updated On: 21 May 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  2. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  3. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  4. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  5. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  6. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  7. நாமக்கல்
    இன்று தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 61 வணிக நிறுவனங்கள் மீது...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் ஒரே நாளில் முட்டை விலை 20 பைசா உயர்வு : ஒரு முட்டை ரூ....
  9. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே பசு மாடுகள் இறந்தது தொடர்பாக ஒருவர் கைது
  10. ஈரோடு
    தோல்வி பயத்தால் ஹிட்லரின் வழியை மோடி பயன்படுத்துகிறார்: ஈரோட்டில்...