/* */

மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

விவசாய நிலத்தில் மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் திரண்டு மனு அளித்தனர்.

HIGHLIGHTS

மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
X

சுரண்டை அருகே மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள், குலையனேரி கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 200 ஏக்கரில், வாழை, தென்னை, கடலை போன்ற பயிர்களை பயிர் செய்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சுரண்டை நகராட்சி சார்பில் மின் மயானம் அமைப்பதற்கு பல இடங்களை தேர்வு செய்து குலையனேரி கிராம எல்லையில் விவசாயிகள் விவசாயம் செய்து வரும் விளைநிலங்களுக்கு அருகில் மின் மயானம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்துள்ளனர்.

இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் நகராட்சி நிர்வாகிகள் அதே இடத்தில் மின் மயானம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் விவசாய பணிகளில் ஈடுபட்டு விவசாயிகள், பொதுமக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அவலகம் முன்பு திரண்டு மனு அளிக்க வந்தனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளின் அலுவலக கூட்டம் நடைபெறுகிறது என்று கூறி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 5 பேர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டு மனு அளித்தனர். புதிதாக சுடுகாடு அமைக்காமல் ஏற்கனவே சுடுகாடு உள்ள பகுதியிலேயே மின்மயமானம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 28 April 2023 8:24 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  2. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  3. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  4. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  7. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  8. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  10. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்