/* */

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் !

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் !
X

பட விளக்கம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரம் ராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது எடுத்த படம்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் வணிகர் விடுதலை முழக்க மாநாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான மாநாடு வருகின்ற மே மாதம் 5-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், அது குறித்தான விளக்கப் பொதுக் கூட்டங்கள் மற்றும் மாநாட்டினை பிரம்மாண்டமாக நடத்திட வேண்டி தமிழக முழுவதும் உள்ள மண்டல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இன்று தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கன்னியாகுமரி- நெல்லை மண்டல நிர்வாகிகளின் பொதுக்குழு கூட்டமானது நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஏராளமான வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், இந்த கூட்டத்தின் போது மதுரை-கொல்லம் நான்கு வழி சாலைகளை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், நெல்லை-தென்காசி SH39 சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்றப்பட வேண்டும், ஆலங்குளம் காவல் நிலையம் தற்போது பாழடைந்த நிலையில் உள்ள நிலையில், விபத்து ஏற்படும் முன் அதை இடத்தில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும், புளியங்குடி பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த தினசரி சந்தையை அதே இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டில் உள்ள வணிகர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவே வணிகர் விடுதலை மாநாடானது நடத்தப்பட உள்ளது.

மாநில அளவில் நடைபெற உள்ள 41-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ள நிலையில், லட்சக்கணக்கான வியாபாரிகள் அதில் ஒன்று திரண்டு வியாபாரிகளின் உரிமைகளை நிலை நாட்ட உள்ளனர்.

மேலும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சிலர் வணிகர்களிடம் அராஜக போக்குடன் நடந்து கொள்வதால் ஏராளமான சிறுகுறு வணிகர்கள் தங்களது வாழ்வாதாரம் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாகவும், இது கண்டிக்கத்தக்க செயல் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதாவது பயன்படுத்த தக்க பிளாஸ்டிக் மற்றும் பயன்படுத்த இயலாத பிளாஸ்டிக் குறித்து தமிழக அரசு வியாபாரிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்து அதன்பின் சட்ட திட்ட விதிமுறைகளை நடைமுறைபடுத்த வேண்டும் எனவும், தென்காசி-நெல்லை நெடுஞ்சாலையில் தற்போது அமைக்கப்பட்டு வரும் சுங்க சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசிடம் முறையிட்டுள்ளதாகவும் அது குறித்தான எதிர்பார்க்கின்ற நடவடிக்கை விரைவில் இருக்கும் எனவும் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

Updated On: 15 March 2024 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  4. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  8. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...