/* */

பாவூர்சத்திரத்தில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு, அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

பாவூர்சத்திரத்தில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு, அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு, மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஜூன் 14-ஆம் தேதியன்று அக்னிபத் திட்டம் குறித்து அறிவித்தார். இளைஞர்களை ராணுவத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்வதே. இந்த அக்னிபத் திட்டம். அக்னிபத் திட்டத்தில் நான்கு ஆண்டுகள் பணிக்காலம் முடிந்ததும் அவர்களுக்கு சேவை நிதி தொகுப்பு வழங்கப்படும். 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குள் இருப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் வேலை பெற முடியும். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மதிப்பீடுகள் செய்யப்பட்டு 25 சதவீதம் பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் பேருந்து நிலையம் முன்பு தென்காசி மாவட்ட கீழப்பாவூர் வட்டார காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக பேரூந்து நிலையம் முன்பு உள்ள காமராசர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் அக்னிபத் திட்டத்தை கண்டிக்கும் விதமாக கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இளைஞர்களையும், இந்திய ராணுவத்தையும் சீரழிக்கும் அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் இல்லை என்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Jun 2022 5:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  4. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  8. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...