/* */

பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்எல்ஏ ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம்

பாஜக பிரமுகரை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்எல்ஏ ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம்
X

சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை அப்புறப்படுத்த காவல்துறையினர் முயற்சித்த போது எடுத்த படம்.

பாஜக பிரமுகரை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் சாலையில் படுத்து உருண்டு போராட்டம். ரவுடி ராஜாவை கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் தொடர் கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான ராஜா, பாஜக பிரமுகரான ராஜ்குமார் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜக பிரமுகர் ராஜ்குமார் தற்போது தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாஜக பிரமுகரை தாக்கிய சட்டமன்ற உறுப்பினர் ராஜா மீது காவல்துறையினர் இதுவரை வழக்கு பதிவு செய்யாததால் காவல்துறைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், ராஜா மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக அவரை கைது செய்ய வலியுறுத்தியும் பாஜகவை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என காவல்துறையினர் அவர்களை கைது செய்ய முயற்சி செய்தபோது, ஆவேசம் அடைந்த பாஜகவினர் தென்காசி - மதுரை நெடுஞ்சாலையில் அமர்ந்து படுத்து உருண்டு, ரவுடி ராஜாவை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்து அருகில் உள்ள சமுதாய நல கூடத்தில் தங்க வைத்தனர்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய கோரி பாஜகவினர் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 31 Jan 2023 3:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  2. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  3. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  5. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  9. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்