/* */

பத்திரிகையாளர் மீது தாக்குதல் - போலீஸ் எஸ்.ஐ., மற்றும் போலீஸ்காரருக்கு ரூ. 3 லட்சம் அபராதம்

Police Fine -பத்திரிகையாளர் தாக்கப்பட்ட வழக்கில், ஆலங்குளம் உதவி ஆய்வாளர் மற்றும் காவலருக்கு மூன்று லட்சம் அபராதம் விதித்தது மாநில மனித உரிமை ஆணையம்.

HIGHLIGHTS

பத்திரிகையாளர் மீது தாக்குதல் - போலீஸ் எஸ்.ஐ., மற்றும் போலீஸ்காரருக்கு ரூ. 3 லட்சம் அபராதம்
X

பத்திரிகையாளரை தாக்கிய வழக்கில் எஸ்.ஐ., மற்றும் போலீஸ்காரருக்கு ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Police Fine -பத்திரிக்கையாளர் தாக்கப்பட்ட வழக்கில், ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலருக்கு மூன்று லட்சம் அபராதம் விதித்து, மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

பல்வேறு இடங்களில் மனித உரிமை மீறல்கள், அவ்வப்போது நடந்து கொண்டிருக்கின்றன. அதனை கண்டுகொள்ளாமல் செல்வது மக்களின் இயல்பாகிவிட்டது. இதனை அரசு அதிகாரிகளும், தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே, தங்களுக்கான உரிமையை நிலைநாட்ட, நீதிகேட்டு மனித உரிமைகள் ஆணையத்தை நாடுகின்றனர். அவ்வாறு பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வுதான் இது.

தென்காசி மாவட்டம், பாவூர் சத்திரம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் சின்னத்துரை மற்றும் காவலர் குற்றாலசாமி ஆகியோர் பணியாற்றி வந்தனர். ஒரு செய்தி சேகரிப்பதற்காக அங்கு வந்த செய்தியாளர் பாரதிராஜன் என்பவரை, கடந்த 31-10-2019 அன்று பாவூர்சத்திரம் காவல்நிலையத்தில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது . இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட செய்தியாளர் பாரதி ராஜன் மாநில மனித உரிமை ஆணையத்தில், வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மனிதஉரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் தலைமையில், கடந்த மூன்று ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது .

இந்நிலையில், மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ் அளித்த தீர்ப்பில், பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் பாரதிராஜனுக்கு இழப்பீடாக வழங்க, உதவிஆய்வாளர் சின்னத்துரைக்கு இரண்டு லட்சம் ரூபாய், காவலர் குற்றாலசாமி ஒருலட்சம் ரூபாய் என, மொத்தம் மூன்று லட்சம். ரூபாய் அபராதம் விதித்தும், அவர்கள் இரண்டு பேர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

இதனை கூடுதல் தலைமைச் செயலாளர், குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து பெற்று பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது .இந்த வழக்கினை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சர்ஜத் நயினா முகமது, மற்றும் சங்கர் ஆகியோர் வாதாடி நியாயம் பெற்று தந்தனர்.

உதவி ஆய்வாளர் செல்லத்துரை, தற்போது ஆலங்குளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் எதுவும் இல்லை. பல்வேறு இடங்களில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வந்தாலும் அது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் இருந்தால் மட்டுமே பொதுமக்கள், தங்களை காத்துக் கொள்ள முடியும். தங்களுக்கான உரிமைகள் என்னவென்றே தெரியாத மக்கள், பாமர மக்கள் மட்டுமின்றி படித்தவர்கள், நகரத்தில் வாழ்பவர்களில் கூட பெரும்பாலானவர்களுக்கு இதுபற்றிய விழிப்புணர்வு இல்லை என்பதும் கசப்பான உண்மை. எனவே, தொடர்ந்து இது போன்ற விதிமீறல்கள் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மீது அரசு கடுமையான தண்டனைகளை மேற்கொள்ள வேண்டும். என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 Oct 2022 10:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’