/* */

கிராமசபை கூட்டத்தில் கணக்கு கேட்பதா? ஊராட்சி தலைவரின் கணவர் அடாவடி

கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவரின் கணவர் தகராறில் ஈடுபட்டதாக வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு.

HIGHLIGHTS

கிராமசபை கூட்டத்தில் கணக்கு கேட்பதா? ஊராட்சி தலைவரின் கணவர் அடாவடி
X

மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் மஜரா ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் தலைவரின் கணவர் தலையிட்டு மிரட்டுவதாக உறுப்பினர்கள் பலர் மனு அளித்தனர்

கிராம சபை கூட்டம் நேற்று அரசு உத்தரவுப்படி நடைபெற்றபோது வழங்கப்பட்ட வரவு, செலவு கணக்குகள் அரசு விதிகளுக்கு புறம்பாக உள்ளதாகவும், சட்ட விதிகளுக்கு முரணாக ஊராட்சி மன்ற தலைவரும், துணைத்தலைவரும் கூட்டு சதி செய்து தவறான வரவு செலவு பட்டியலை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது உறுப்பினர்களும், பொதுமக்களும் கணக்கு கேட்டு கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது பஞ்சாயத்து தலைவரின் கணவர், உறுப்பினரோ பொதுமக்களோ கணக்கு வழக்கு கேட்க கூடாது என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பெண் பஞ்சாயத்து தலைவராக உள்ள போது கணவரோ உறவினரோ தலையீடு செய்ய கூடாது என்ற சட்டத்தை மீறி பஞ்சாயத்து தலைவரின் கணவர், பஞ்சாயத்தை கட்டுக்குள் கொண்டு வருவது உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரவு செலவு கணக்கிலும் இது தெளிவாகி உள்ளதாகவும் கடையாலுருட்டி, கடம்பன் குளம், திருமலாபுரம், வேலப்ப நாடாரூர் ஆகிய பகுதி பொதுமக்களை ஊராட்சி தலைவரும் அவரது கணவரும் மிரட்டியதாகவும் இதனை விசாரித்து கணக்கு வழக்குகளை சரிபார்த்து மோசடியை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Updated On: 2 May 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!