/* */

தென்காசி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காவல் துறை காதல் ஜோடி

தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவல் துறை காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

HIGHLIGHTS

தென்காசி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காவல் துறை காதல் ஜோடி
X

தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த சார்பு ஆய்வாளர்கள் காதல் ஜோடி.

காதல் திருமணம் செய்ய பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து விட்டதால் சார்பு ஆய்வாளர்கள் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் பகுதியை சேர்ந்தவர் குத்தாலிங்கம். இவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காவல் நிலையத்தில் தற்போது சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு சார்பு ஆய்வாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சி பெற்றபோது, குத்தாலிங்கத்திற்கும் அதே பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த தற்போது நாகர்கோவில் ஆயுதப்படையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் சேர்ந்தமரம் அருகே உள்ள அச்சம்பட்டி பகுதியை சேர்ந்த வடிவம்மாள் என்பவருக்கும் இடையே பயிற்சியின் போது காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்து அவர்களது குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர்.

ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று சார்பு ஆய்வாளர்கள் காதல் ஜோடி பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் முதலில் பாதுகாப்பு கோரி தஞ்சம் அடைந்துள்ளது.

அங்கிருந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் அறிவுறுத்தலின் பேரில், தற்போது தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர்கள் காதல் ஜோடி தஞ்சம் அடைந்துள்ள சூழலில், இரு வீட்டாரையும் அழைத்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்பு ஆய்வாளர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்ய முடியாத சூழலில், பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 May 2023 2:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  2. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  4. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  7. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  8. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  9. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  10. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு