/* */

தென்காசி மாவட்டத்தில் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா நிறைவு

தென்காசி மாவட்டத்தில் 75வது சுதந்திர திருநாள் அமுத பெரு விழா நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா நிறைவு
X

கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் 75வது சுதந்திர திருநாள் அமுத பெரு விழா நிறைவு நாள் நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நிகழ்ச்சி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் (16.05.2022) அன்று துவக்கி வைத்தார். தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பேசியதாவது:- 75வது சுதந்திர திருநாள் அமுத பெரு விழா நிகழ்ச்சி தென்காசி மாவட்டத்தில் ஏழு நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் அரங்குகள் அரசு நலத் திட்டங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். தொடர்ந்து அரசின் நலத் திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பேசியதாவது:- 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா மக்களின் திருவிழா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து துறைகளின் செயல்பாடுகள் மற்றும் அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு அந்தந்த துறைக்கு தகுந்தவாறு பணி சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, மக்களும் பயனடையும் வகையிலும், அலுவலர்களும் சிறப்பாக செயல்படும் வகையிலும், அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் ரூபாய் 600 கோடிக்கும் மேல் அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் இந்த பல்துறை பணி விளக்க முகாமினை சிறப்பாக நடத்திய செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கும், அரங்குகளை சிறப்பாக அமைத்து ஒத்துழைத்த அனைத்து துறை அலுவலர்களுக்கும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

பல்துறை பணி விளக்க முகாமில் பங்கேற்று அரங்குகளை அமைத்த அனைத்து துறைகளுக்கும் பாராட்டும், பரிசுகளும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்திய பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு மற்றும் கலை குழுவினருக்கும் பரிசுகளை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், நகர்மன்ற துணைத்தலைவர் சுப்பையா ஆகியோர் வழங்கினர். மேலும் 75வது சுதந்திரத் திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. சங்கரன்கோவில் கலைவாணர் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வருவாய் கோட்டாட்சியர் (தென்காசி) கெங்காதேவி வரவேற்றார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா இளவரசி நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியில் அனைத்து துறை அலுவலர்கள் மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 23 May 2022 4:09 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  2. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  4. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  6. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  9. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!