/* */

பாவூர்சத்திரத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 74 வாகனங்கள் 13ம் தேதி ஏலம்

பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மதுவிலக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் வரும் 13ம் தேதி ஏலம்.

HIGHLIGHTS

பாவூர்சத்திரத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 74 வாகனங்கள் 13ம் தேதி ஏலம்
X

பைல்படம்.

தென்காசி மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு விதிமுறைகளின் படி பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்கள் வழக்கு நிலுவையில் இருப்பதால் அவற்றை அரசுடமையாக்ப்பட்டு அவை ஏலம் விடுவது வழக்கம். தற்போது அரசுடமையாக்கப்பட்ட 74 இருசக்கர வாகனங்களை ஏலம் விட காவல்துறை மற்றும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் பாவூர்சத்திரம் காவல் நிலையம் அருகில் உள்ள வெண்ணிமலை முருகன் கோவில் முன்பு உள்ள மைதானத்தில் 13.05.2022 அன்று காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது. பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 13.05.2022 அன்று காலை 9.00 மணியளவில் ரூ.2000 செலுத்தி காப்பு தொகை செலுத்தியதற்கான ரசீதை பெற்று கொள்ளவும். காப்பு தொகை செலுத்தியவர்கள் வாகனத்தின் ஏலம் எடுக்கவில்லை எனில் தொகை செலுத்தியதற்கான காப்பு தொகை திருப்பி ஒப்படைக்கப்படும். ஏலம் விடப்படும் 74 வாகனங்கள் பாவூர்சத்திரம் காவல் நிலையம் முன்பு உள்ள வெண்ணி மலை முருகன் கோவில் முன்புள்ள மைதானத்தில் உள்ளது.

ஏலதாரர்கள் வாகனங்களை பார்வையிட்டு வாகன ஏலத்தில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஏலத்தில் எடுக்கப்படும் வாகனத்திற்கான ஏலத்தொகை அரசு நிர்ணயம் செய்துள்ள தொகை, வரியுடன் சேர்த்து ரொக்கம்மாக அன்றைய தினமே செலுத்த வேண்டும். ஏலம் எடுக்கப்பட்ட வாகனங்கள் தொகையை செலுத்திய உடன் ஏலதாரர்கள் வசம் ஒப்படைக்கப்படும். மேலும் ஏலம் எடுக்க வரும் ஏலதாரர்கள் கொரானா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தியிருக்க வேண்டும்..

Updated On: 10 May 2022 2:31 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  3. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  5. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  6. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  7. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  8. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  9. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!