அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
X

தென்காசி மாவட்டம், குருவிகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்னபூர்ணாபுரத்தில் வசித்து வரும் கபிலன்(25) என்பவரும் அவரின் மனைவியும் கருத்து வேறுபாட்டின் காரணமாக தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கபிலன் தனது மனைவியின் தாயாரை போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக திட்டியுள்ளார். ஏன் இப்படி செய்கிறாய் என்று அவரின் உறவினரான இளையராஜா (48) கபிலனிடம் கேட்டதற்கு அவரை அசிங்கமாக பேசி அரிவாளால் வெட்ட முயன்றபோது, அதை தடுக்க வந்த கபிலனின் தம்பியான குமாரை(22) அரிவாள் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து இளையராஜா குருவிகுளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சண்முகவடிவு விசாரணை மேற்கொண்டு மேற்படி கபிலன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 14 March 2021 2:18 PM GMT

Related News