/* */

நெல் கொள்முதல் நிலையஅதிகாரிகளை மிரட்டிய திமுக ஒன்றிய செயலாளர்

நெல் கொள்முதல் நிலையத்தை தன்னிடம் கேட்காமல் எப்படி நடத்தலாம் அதிகாரி மற்றும் விவசாயிகளை மிரட்டிய கடையம் ஒன்றிய திமுக செயலாளர்

HIGHLIGHTS

நெல் கொள்முதல் நிலையஅதிகாரிகளை மிரட்டிய திமுக ஒன்றிய செயலாளர்
X

விவசாயிகளையும் அதிகாரிகளையும் மிரட்டிய கடையம் ஒன்றிய திமுக செயலாளர்

தென்காசி மாவட்டம் கடையத்தில் சுமார் நான்காயிரம் ஏக்கருக்கும் மேலாக விவசாயம் நடைபெற்று தற்போது அறுவடை நடந்து கொண்டிருக்கிறது. இந்த அறுவடைக்கான நெல்லை விவசாயிகள் வருடந்தோறும் கடையத்தில் அரசால் நடத்தப்படும் நெல் கொள்முதல் நிலையத்தில் நெற்களை விற்று பயனடைவர்.

திடீரென்று வழக்கமான கடையத்தில் இருக்கும் இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் வைக்காமல், நெல் கொள்முதல் நிலையத்தை திமுக ஒன்றிய செயலாளர்கள் மிகக்குறைந்த விவசாய பகுதியைக் கொண்ட கடையத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கானாவூரில் புதியதாக வைத்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

தொடர்ந்து கடையம் பகுதி விவசாயிகள் வேளாண்மை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் கடையத்தில் மீண்டும் நெல் கொள்முதல் நிலையம் நேற்று துவங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்கள் நெற்களை கடையம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர்.

தங்களை மீறி கடையத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை ஆரம்பித்ததால் திமுக கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் சுமார் 20க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் வந்து அதிகாரிகளையும் விவசாயிகளையும் கடுமையாக மிரட்டினார் ஒருகட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது அங்கு உடனடியாக வந்த காவல்துறைஅவர்களை அப்புறப்படுத்தினர்.

இதனால் அதிர்ச்சியுற்ற விவசாயிகள் திமுக தெற்கு ஒன்றிய கவுன்சிலர் ஜெயகுமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடையம் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாயிகள் அனைவரும் ஒன்றுகூடி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்

Updated On: 16 March 2022 5:19 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  2. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  3. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  5. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  6. திருவள்ளூர்
    தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...