/* */

சிவகங்கை அருகே பசுமை திருவிழா: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை இணைந்து நடத்தும் பசுமை திருவிழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

சிவகங்கை அருகே பசுமை திருவிழா: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
X

காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் பசுமை திருவிழாவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை சார்பாக, பசுமை திருவிழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்து, பொதுமக்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர் அவர் தெரிவிக்கையில்,

தமிழகத்தில் வனப்பரப்பை அதிகப்படுத்தி, பசுமைப் போர்வையை விரிவுபடுத்தும் வகையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24.09.2022 அன்று தொடங்கி வைத்தார். தமிழக வனம் மற்றும் பசுமைப் பரப்பினை 33 சதவீதமாக உயர்த்துவதனை முக்கிய நோக்கமாகக் கொண்டு இவ்வியக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மரம் வளர்ப்பிற்கு ஊக்குவிப்பதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும்.

பசுமையான தமிழகத்தினை உருவாக்கிட வேண்டும் என்ற அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் "பசுமை தமிழ்நாடு" என்ற இயக்கத்தினை துவக்கி வைத்துள்ளார்கள். அதனடிப்படையில், மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு, அதனை முறையாக பராமரிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்குள் 50 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டு, பொதுமக்கள் பங்களிப்புடன் அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை தானாக முன்வந்து, அரசுடன் இணைந்து, சிவகங்கை பசுமை திருவிழா என்று பெயரிட்டு, 09.10.2022 முதல் 14.10.2022 வரை ஒருவாரகாலத்தில் 50,000 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு, அதன் தொடக்கமாக, கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் 2,000 மரக்கன்றுகளை பள்ளிகள், கல்லூரிகளை சார்ந்த மாணாக்கர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் மரக்கன்றுகளை முறையாகப் பராமரித்திடவும், அதேபோன்று பொதுமக்களும் தங்களுக்கு வழங்கப்படும் மரக்கன்றுகளை வீடுகளில் நல்லமுறையில் பராமரித்து, பசுமையான மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தை உருவாக்கிட வேண்டும். மேலும், மரக்கன்றுகள் வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அரசுடன் இணைந்து பசுமையாக தமிழகத்தினை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டுமென, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.

இந்த பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் இணைய வேண்டுமா?

வேளாண் பெருமக்கள் தொழில் நிறுவனங்கள், மக்கள் நலச சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் மரக்கன்றுகளை எளிதாகப் பெறும் பொருட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் இணையதள முகவரியில் (www.greentnmission.com) பயன்பாட்டாளர்கள் தங்களது சுய விபரங்களை பதிவு செய்து, தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

வேளாண் பெருமக்கள், மரக்கன்றுகளை நடுவதற்கு தங்களுக்குச் சொந்தமான நிலங்கள் பற்றிய விவரங்களுடன் தங்களுக்குத் தேவைப்படும் மரக்கன்றுகளை இணைய தளம் மூலமாகவோ அல்லது கடிதத்தின் வாயிலாக இயக்குநர், பசுமை தமிழ்நாடு இயக்கம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை சென்னை.600015 என்கிற முகவரிக்கு அனுப்பி வைத்து பெற்றுக் கொள்ளலாம்

Updated On: 10 Oct 2022 2:01 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  4. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  5. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  6. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  7. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  8. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  10. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...