/* */

செகந்திராபாத்- ராமேஸ்வரம் ரயில் இனி சிவகங்கையில் நிற்கும் :ரயில்வேதுறை தகவல்

கோரிக்கையை நிறைவேற்றிய ரயில்வேதுறையின் அறிவிப்புக்கு சிவகங்கை மாவட்ட மக்கள் மகிழ்ச்சியும் வரவேற்பையும் தெரிவித்தனர்

HIGHLIGHTS

செகந்திராபாத்- ராமேஸ்வரம்  ரயில்  இனி சிவகங்கையில் நிற்கும் :ரயில்வேதுறை தகவல்
X

பைல் படம்

செகந்திராபாத் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சிவகங்கையில் நின்று செல்லகிம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிவகங்கை மக்கள் எளிதில் திருப்பதி சென்று வர ஏதுவாக செகந்திராபாத்- ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சிவகங்கையில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மாவட்ட தலைநகரான சிவகங்கையில் நின்று செல்வதில்லை. இதனால் சிவகங்கை மாவட்ட மக்கள் பிற மாநிலங்களில் உள்ள ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது சிவகங்கை வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் சிவகங்கையைத்தவிர்த்து, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்கின்றன.

இந்நிலையில், திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே ராமேஸ்வரம் திருப்பதி வழியாக செகந்திராபாதுக்கு சிறப்பு ரயிலை இயக்குகிறது. இந்த ரயில் சிவகங்கையில் நிற்காது என முதலில் அறிவித்திருந்தனர். இதையடுத்து, சிவகங்கை நகர் மக்கள் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கும் மத்திய ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கும் செகந்திராபாத்- ராமேஸ்வரம் ரயில் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து செகந்திராபாத்- ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சிவகங்கையில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு சிவகங்கை மாவட்ட மக்கள் மகிழ்ச்சியும் வரவேற்பையும் தெரிவித்தனர்.

Updated On: 15 Dec 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!