/* */

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் பங்குனித் திருவிழா

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழா இரண்டாம் நாளில் 71 வது ஆண்டு மண்டகப்படி விழா நடைபெற்றது

HIGHLIGHTS

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் பங்குனித் திருவிழா
X

சிறப்பு அலங்காரத்தில் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர்- சௌந்தரநாயகி அம்மன்

திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழா இரண்டாம் நாள் மண்டகபடி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழாவில் 71 வது ஆண்டு இரண்டாம் நாள் மண்டகப்படி விழா நடைபெற்றது.

விழாவை ஒட்டி காலை 8 மணிக்கு அம்பாள், சுவாமி அழைத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புஷ்பனேஸ்வரர் சுவாமி கற்பக விருச்ச வாகனத்திலும், சௌந்தர நாயகிஅம்பாள் காமதேனு வாகனத்திலும் அதிர் வேட்டுகள் முழங்க பக்தர்கள் புடை சூழ நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து திருக்கோவிலை வந்தடைந்தனர்.சுவாமி அம்பாளுடன் சுப்பிரமணிய சுவாமி, விநாயகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளும் உடன் சென்றனர்.

விழாவில் ருக்மணி பழனிவேல்ராஜன், தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், டாக்டர் விஜய் ராஜன், குரு மருத்துவமனை டாக்டர் பாலமுருகன், மாவட்ட நீதிபதி ஓய்வு தட்சிணாமூர்த்தி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, குரு மருத்துவமனை மேலாண் இயக்குனர் கல்பனா மற்றும் ஏராளமான பக்தர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மண்டகப்படி உபயதாரர் மயில்வேல் குடும்பத்தினர் செய்திருந்தனர்

Updated On: 29 March 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  3. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  4. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  5. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  6. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  7. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  8. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  10. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?