/* */

கலெக்டர் தலைமையில் காரைக்குடி வட்ட அளவில் குறைதீர்க்கும் நாள் முகாம்

கலெக்டர் தலைமையில் காரைக்குடி வட்ட அளவில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கலெக்டர் தலைமையில் காரைக்குடி வட்ட அளவில் குறைதீர்க்கும் நாள் முகாம்
X

காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் வட்ட அளவிளலான மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர்ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் ,மாவட்ட ஆட்சித்தலைவர், பொதுமக்களிடமிருந்து 911 கோரிக்கை மனுக்கள் பெற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவித்த போது

தமிழ்நாடு முதலமைச்சர் , பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். பொதுமக்கள் தங்கள் தேவைகளை கோரிக்கை மனுக்களாக அளித்து பயன்பெறும் வகையில், பிரதி வாரம்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டத்தின் கிராமப்புறப் பகுதிகளில் மக்கள் தொடர்பு முகாம் ஆகியவைகள் மூலம் பொதுமக்களின் தேவைகளை அறிந்து தகுதியுடைய நபர்களின் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, மாவட்டம் முழுவதும் உள்ள வட்டவாரியாக மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடத்திட திட்டமிடப்பட்டு, முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைகள்; பெறப்பட்டு வருகிறது. இம்முகாம்களின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பல்வேறு கோரிக்கை மனுக்களில் எளிதில் உடனடியாக தீர்க்கக்கூடிய மனுக்கள் உள்ளன. அவற்றை காரணங்கள் கூறி காலதாமதம் செய்யாமல், விரைந்து பயன்களை வழங்கிட வேண்டும். மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு தேவையான வழிமுறைகளைக் கூறி விண்ணப்பிக்க செய்து, அரசின் பயன்களை பெறுவதற்கு உதவிட வேண்டும். தனித்துறையின் மூலம் செய்யக்கூடியப் பணிகளை விரைந்து முடித்திடவும், பிறதுறைகளுடன் இணைந்து மேற்கொள்ளும் பணிகளை கலந்து பேசி காலதாமதமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திடவும் வேண்டும்.

பட்டா வேண்டி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை முறையாக கள ஆய்வு செய்து, தகுதியான நபர்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களின் குறைகளை தீர்ப்பது அரசு அலுவலர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இப்பகுதியில் முகாம்கள் மேற்கொண்டு, அவர்களுக்குரிய பலன்களை வழங்கிட வேண்டும்.

மேலும், அரசு அலுவலர்கள் தங்களிடம் மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் போது, பெரும்பாலான பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு எளிதில் தீர்வு காண வழிவகை ஏற்படுகிறது. எனவே, அனைத்து அலுவலர்களும் தங்களுக்கான பணிகளை சிறந்த முறையில் மேற்கொண்டு, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றிட உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இம்மக்கள் குறை தீர்க்கும் முகாமில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு திட்டத்தின் கீழ் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.17,000 மதிப்பீட்டிலும், செவித்திறன் குறையுடையோருக்கான தக்க செயலிகளுடன் கூடி கைபேசி வழங்கும் திட்டத்தின் கீழ் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11,000 மதிப்பீட்டிலும், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,840 மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.1,48,680 மதிப்பீட்டிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 5 விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்களையும் வழங்கினார்.

மேலும், இம்முகாமில் பெறப்பட்ட தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 2 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர், வழங்கினார்.

இம்முகாமில், காரைக்குடி நகர்மன்றத்தலைவர் எஸ்.முத்துத்துரை, தேவகோட்டை கோட்டாட்சியர் டி.பிரபாகரன், பள்ளத்தூர் பேரூராட்சித் தலைவர் சாந்தி சிவசங்கர், காரைக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் என்.குணசேகரன், தனித்துணை ஆட்சியர் (சமூகப்பாதுகாப்புத் திட்டம்) மு.காமாட்சி, காரைக்குடி நகராட்சி ஆணையர் இரா.லெட்சுமணன், வட்டாட்சியர் இரா.மாணிக்கவாசகம், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் (நுண்ணுயிர் பாசனம்) ஆர்.தனபாலன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் து.கதிர்வேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 April 2022 10:19 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்