/* */

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக சரிவு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (ஏப்.,18) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 22 கன அடியாக சரிந்துள்ளது.

HIGHLIGHTS

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக சரிவு
X

மேட்டூர் அணை.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (ஏப்.,18) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 22 கன அடியாக சரிந்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியாக நீடிக்கிறது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று (புதன்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 91 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 22 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும், திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 55.83 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 55.62 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 21.53 டிஎம்சியாக உள்ளது.

Updated On: 18 April 2024 3:55 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!