/* */

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கன அடியாக குறைவு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 68 கன அடியாக உள்ளது.

HIGHLIGHTS

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கன அடியாக குறைவு
X

மேட்டூர் அணை.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 68 கன அடியாக உள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியாக நீடிக்கிறது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று (சனிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 80 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 68 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 56.63 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 56.43 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 22.10 டிஎம்சியாக உள்ளது.

Updated On: 14 April 2024 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்